ஆட்சி அமைக்க பாஜகவிற்கு அழைப்பு விடுத்த ஆளுநர்! சிவசேனா சமாதானம் ஆகுமா?

0
171

ஆட்சி அமைக்க பாஜகவிற்கு அழைப்பு விடுத்த ஆளுநர்! சிவசேனா சமாதானம் ஆகுமா?

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்ட மன்ற தேர்தல் முடிவடைந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டு மூன்று வாரங்கள் முடிந்து விட்ட நிலையில் இன்னும் அம்மாநிலத்தில் புதிய ஆட்சி அமையவில்லை. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டசபை காலம் இன்றுடன் முடிவடைவதால் இன்று ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜகவிற்கு அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்கள் ஆட்சி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மகாராஷ்டிர மாநிலத்தில் பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெற்றிருந்தாலும் முதல்வர் பதவி யாருக்கு? என்ற போட்டியால் இதுவரை ஆட்சி அமைக்கப்படாமல் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவியில் இரண்டரை வருட காலம் இரு கட்சிகளும் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சிவசேனாவின் ஆலோசனையை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை

இதனை அடுத்து சிவசேனா புதிய முயற்சியாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தது. ஆனால் இந்த முயற்சி பலிக்கவில்லை. சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்ய சோனியா காந்தி விரும்பாததால் தாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கப் போவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அவர் கூறிவிட்டார்

இதனால் சிவசேனாவுக்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக இந்த ஆட்சிக்கு சிவசேனா ஆதரவு கொடுக்கும் என்றும் அவ்வாறு ஆதரவு கொடுக்காமல் ஆட்சி கவிழ்ந்தால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. எனவே குடியரசு தலைவர் ஆட்சியை தவிர்க்க சிவசேனா சமாதானம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Previous articleஅயோத்தி தீர்ப்பு குறித்து அர்ஜூன் சம்பத் வெளியிட்டுள்ள அதிரடி வீடியோ!
Next articleரஜினியின் பேட்டிக்கு இதுதான் காரணம்! அமைச்சர் செல்லூர் ராஜு கண்டுபிடித்த உண்மை