அரசு பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்திய அரசு.!! பொதுமக்கள் அதிர்ச்சி.!!

0
141

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது.

இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் பேருந்து உட்பட அனைத்து வகையான அரசு பேருந்துகளிலும் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

டீசல் விலை உயர்வு காரணமாக இனி அரசு பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் 17.17% உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு மகாராஷ்டிரா மாநில அரசு போக்குவரத்து கழகம் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துகிறது. இதனால் 50 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என போக்குவரத்து கழக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Previous articleமுன்னாள் முதல்வருக்கு திடீர் உடல்நலக் குறைவு! மருத்துவமனையில் அவசர அனுமதி!
Next articleபடித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்! ஆ ராசா!