எனது மகள்தான் முக்கியம்.. உலகக் கோப்பை போட்டியில் இருந்து ஓட்டம் பிடிக்கும் முக்கிய வீரர்.!

Photo of author

By Jayachithra

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இருந்து வரும் மஹேல ஜெயவர்த்தனே தற்போது கொரோனா தடுப்பு வளையத்தை விட்டு வெளியேற இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14 வரை டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் ஓமன், ஷார்ஜா, அபுதாபி, துபாய் ஆகிய நான்கு பகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியாவில் நடைபெற இருந்த இந்த t-20 உலக கோப்பை போட்டியில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

டெஸ்ட் மேட்ச் கள் முடிந்த பின்னர் அதிலிருந்து தேர்வாகி என்ற நான்கு அணிகள் முன்னதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 8 அணிகள் உடன் சேர்ந்து அக்டோபர் 23 முதல் பிரதான சுற்றில் போட்டியிட இருக்கிறது. இலங்கை அணி தகுதி சுற்றில் பங்கேற்று சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி அடைந்தது. இத்தகைய நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக பணியாற்றி வரும் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தனே தற்போது டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து சூப்பர் 12 சுற்றுக்கு முன்னதாகவே வெளியேறவுள்ளார். இதுகுறித்து ஜெயவர்த்தனே, ” இது மிகவும் கடினமானது இதுகுறித்து இப்பொழுதுதான் நான் யோசித்தேன். கடந்த ஜூன் மாதம் முதல் தடுப்பு வளையத்தில் 135 நாட்கள் இருக்கின்றேன்.

தற்போது இதன் இறுதி கட்டத்தில் நான் இருக்கிறேன். இந்த நிலைமையை நான் புரிந்துகொள்கிறேன். இனி தொழில்நுட்பத்தின் உதவியுடன் நான் அணியில் இருப்பேன். என் மகளைப் பார்த்து பல நாட்கள் ஆகின்றது. ஒரு தந்தையாக என்னை அனைவராலும் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன். நான் விரைவில் வீட்டிற்கு திரும்ப வேண்டும்.

ஐபிஎல் போட்டியில் பணியாற்றிய காரணத்தால் ஷார்ஜா மற்றும் மற்ற மைதானங்களில் எப்படி விளையாட வேண்டும் என்கிற பிளானை செய்து தருவேன்.”என்று தெரிவித்துள்ளார்.

ஜெயவர்த்தனே தி ஹண்ட்ரட் t20 போட்டியில் வெற்றி பெற்ற சதர்ன் பிரேவ்ஸ் அணியுடைய தலைமை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார் ‌ இந்த போட்டிக்கு பின் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிச்சுற்றில் இலங்கை அணிக்கு ஆலோசகராகவும் பணியாற்றி இருக்கிறார்.