“உங்க நடிப்ப பத்தி பேச எனக்கு தகுதி இல்ல… “ விக்ரம் பார்த்து சூப்பர் ஸ்டார் நடிகர் பாராட்டு

0
196

 

நடிகர் மகேஷ் பாபு விக்ரம் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் படம் எதுவும் வெளியாகாத நிலையில் ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.  கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்த விக்ரம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்திருந்தார்.

வெளியானது முதல் இப்போது வரை வெற்றிகரமாக ஓடிவரும் விக்ரம் திரைப்படம் இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் மேல் வெற்றிகரமாக திரையரங்குகள் மூலம் வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 170 கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் எந்தவொரு படமும் படைக்காத வசூல் சாதனை இது.

இந்நிலையில் ரிலீஸுக்கு பின்னர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் தயாரிப்பாளராக மட்டும் சுமார் 120 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் வெளியான தமிழ் படங்களில் தயாரிப்பாளருக்கு இந்த அளவுக்கு லாபம் கொடுத்த தமிழ்ப் படம் எதுவும் இல்லை என கோலிவுட் வட்டாரமே ஆச்சர்யத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போதும் வார இறுதி நாட்களில் சில திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் விக்ரம் படத்தைப் பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு, படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டி பேசியுள்ளார். இது சம்மந்தமான அவரது டிவீட்டில் “லெஜண்ட் கமல் அவர்களே உங்கள் நடிப்பைப் பற்றி பேசும் தகுதி எனக்கு இல்லை. உங்கள் ரசிகனாக இந்த தருணத்தில் நான் பெருமை அடைகிறேன்.” எனக் கூறியுள்ளார்.

 

Previous articleகிடுகிடுவென பனிப்பாறைகள் சரிந்தது! இதில் சிக்கிக் கொண்ட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழப்பு! மேலும் சிலபேரை ஹெலிகாப்டர்  மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு  வருகின்றார்கள்!!
Next articleபேருந்துகள் அனைத்தும்  இந்த விதி முறையின் கீழ் தான் இயங்க வேன்டும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!