தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் குறைந்த விலையில் அரிசி பருப்பு எண்ணெய் சர்க்கரை போன்றவை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் ரேஷன் கார்டு வைத்திருக்கக்கூடிய குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இருக்கக்கூடிய ரேஷன் கடைகளை பொருத்தவரை மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமை ஊழியர்களுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக மாதத்தின் முதல் இரண்டு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகள் நியாய விலை கடை திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் விடுமுறை நாட்களில் கூட தங்களுக்கு அதிக அளவு வேலைப்பளு இருப்பதாக நியாய விலை கடை ஊழியர்கள் தெரிவித்த நிலையில் இதனை சரிப்படுத்தும் விதமாக நியாய விலை கடைகளில் சில முக்கிய மாற்றங்களை தமிழக அரசு மேற்கொண்டு இருக்கிறது.
அதன்படி, நியாயவிலைக் கடைகளில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகளில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும் பொருட்களை கணக்கு பார்த்த எடுத்து வைப்பது போன்ற பணிகளுக்காக கடை திறக்க வேண்டிய நிலை இருப்பதால் இனி மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகளில் கூட்டுறவு சங்கங்களில் இருந்து நியாயவிலைக் கடைகளுக்கு எந்த வித பொருட்களையும் அனுப்பக்கூடாது என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இதனால் நியாய விலை கடை ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.