2025 மற்றும் 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலானது கடந்த வாரம் முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடை ரீதியாக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் இன்று தெரிவித்துள்ளனர். இதர மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்டவைகளில் மக்கள் ரேஷன் கடைக்கு செல்லாமல் வீடு தேடி பொருள்கள் வழங்கும் திட்டமானது நடைமுறையில் உள்ளது.
இதனை தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதன் பேரில் தமிழக உணவுத்துறை அதிகாரிகள் அம்மா மாவட்டத்திற்கு சென்று அதன் செயல்பாடுகள் அறிந்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பர். பின்பு அதனை வைத்து இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இன்று பெரிய கிராமங்களில் உடன் இருக்கும் சிறு கிராமங்கள் ரேஷன் கடைக்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.
இதனால் பகுதி நேர நியாய விலை கடைகள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து இது ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். இது பரிசீலனை செய்யப்படும் பட்சத்தில் துணை கிராமங்கள் நலனுக்காக ரேஷன் கடைகள் பகுதி நேரம் செயல்படுத்தப்படும். அந்தவகையில் பொதுமக்களுக்கு நியாய விலைக் கடை பொருட்கள் வாங்க 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்க தேவையில்லை. தனது கிராமத்திலிருந்துக் கொணடே வாங்கிக்கொள்ளலாம். மேற்கொண்டு அனைத்து மாவட்டங்களில் உள்ள வாடை நியாய விலை கடைக்கு பதிலாக சொந்தமாக கட்டித்தரப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார்.