இன்று மாலை ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட்!! எதிர்பார்ப்பில் சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள்!!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என்று ஜெயிலர் படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்ணாத்த படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.
ஜெயிலர் படத்தில் பாலிவுட் நடிகர் ஜேக்கி ஷெரூப், சான்டில்வுட் நடிகர் சிவராஜ் குமார், மோலிவுட் நடிகர் மோகன்லால், டோலிவுட் நடிகர் சுனில் இவர்கள் அனைவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மேலும் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, தமன்னா மற்றும் பலர் ஜெயிலர் படத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தை தயாரிக்கின்றது.
இதையடுத்து சில நாட்களாக ஜெயிலர் படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகமல் இருந்த நிலையில் இன்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று மாலை 6.30 மணிக்கு ஜெயிலர் படத்தின் அப்டேட் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஜெயிலர் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில் இன்று மாலை வெளியாக இருக்கும் அப்டேட் என்ன என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாத்து கொண்டிருக்கின்றனர்.