லைலாவை ஏமாற்றிய மஜ்னு!! நீதி கேட்கும் மாதர் சங்கம்!!

0
175
Majunu cheated on Laila !! Mather Sangam seeks justice !!
Majunu cheated on Laila !! Mather Sangam seeks justice !!

லைலாவை ஏமாற்றிய மஜ்னு!! நீதி கேட்கும் மாதர் சங்கம்!!

லைலா மஜ்னு, சூர்யா ஜோதிகா என்று சொன்ன உடனே நம் நினைவுக்கு வருவது அவர்களின் காவியக் காதல் கதை தான். இந்த கததைகளில் காதலர்கள் பல சூழ்நிலைகளைக் கடந்தது சேர்ந்து வாழும் ஒரு உணர்ச்சிபூவமாக தோன்றும். ஆனல் டைடானிக், ஷாஜகான் போன்ற திரைப்படங்கள் காதல் தோல்விக்கு எடுத்டுகட்டாக இருக்கும் அந்த வகையில்,  தேனி மாவட்டத்தில் சேர்ந்த வாலிப்பாறை அருகே உள்ள தும்க்குண்டு பகுதியை சேர்ந்தவர் சாருமதி இவருக்கு வயது 22. இவரின் பெற்றோர்கள் அர்ஜுனன் மற்றும் ஜெயலட்சுமி. மேலும் சாருமதி பெரியகுளம் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படிப்பை தொடர்ந்து வருகிறார்.

 

இந்த நிலையில் சாருமதி தும்மக்குண்டு பகுதியில் வசிக்கும்  சமுத்திரக்கனியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்  சாருமதியின் பெற்றோகளுக்கு இந்த தகவல் தெரிந்தது அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக சாருமதியின் அம்மா ஜெயலட்சுமி மற்றும் அவரின் அப்பா அர்ஜுனன் இருவரும் சாருமதி, சமுத்திரக்கனி காதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சமுத்திரக்கனியின் வீட்டிற்கு சென்று எங்கள் மகளும் உங்களது மகன் காதலித்து வருவதால் நாங்கள் திருமணம் செய்து கொடுக்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

 

ஆனால் இதை சமுத்திரக்கனியின் பெற்றோர்கள் மறுத்துவிட்டனர். மேலும் சமூத்திரக்கனியும் இது தொடர்பாக எனது பெற்றோர்கள் சம்மதம் இல்லை என்றால் எனக்கும் சம்மதம் இல்லை என்று கூறியுள்ளார். சமூத்திரக்கனி அவ்வாறு கூறியதை அறிந்தது மனமுடைந்து போன சாருமதி விரக்தியில் கடந்த 21.6.2021. அன்று சாருமதி தங்கி படிக்கும் கல்லூரி விடுதி அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்டார்.

பின்னர் அங்கிருந்த மாணவர்கள் பெரியகுளம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சாருமதியை பரிசோதனை செய்த பொழுது சாருமதி இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து வழக்கு பதியப்பட்டது. அனால் இன்று வரை சருமதியை  காதலித்து ஏமாற்றி  தற்கொலைக்கு காரணமாக இருந்த சமுத்திரக்கணி மற்றும் அவரது குடும்பத்தார்கள் மீது நடவடிக்ககைள் செய்யவில்லை.  அதனால் சாருமதி தாயார் இந்த விவகாரத்திற்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்கஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர் ஒன்றினைந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Previous articleஹைதி அதிபர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த வெள்ளை மாளிகை!
Next articleபாஜக அமைச்சருக்கு முதல்வர் தொலைப்பேசி அழைப்பு! இந்த காரணத்திற்காக தானா?