“முதல்வர்” படத்தில் களமிறங்கும் மக்கள் செல்வன்!! அடுத்தடுத்து வெளியான முக்கிய அப்டேட்!!
தமிழ் திரையுலகில் தனது எதார்த்தமான நடிப்பினால் மக்களின் மனதில் இடம் பிடித்து மக்கள் செல்வன் என்ற பெயரால் அழைக்கப்படுபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி.
இவர் தற்போது ஹீரோ மற்றும் வில்லன் என்ற இரு கதாபாத்திரங்களிலும் தன்னுடைய நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு கிரிக்கெட் அணியின் முன்னாள் இலங்கை சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
இப்படத்திற்கு ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பியதால் இதில் இருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று முத்தையா முரளிதரனே விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்தார்.
எனவே, விஜய் சேதுபதி இதில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவருக்கு மாற்றாக இப்டத்திற்கு தற்போது 800 என்று பெயர் சூட்டப்பட்டு அதில் பாலிவுட் நடிகரான மாதுர் முட்டம் நடித்து வருகிறார்.
இந்த படம் போனால் என்ன அடுத்து ஒரு பயோபிக் படத்தில் விஜய் சேதுபதி அதிரடியாக களமிறங்க உள்ளார். இப்படத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாறு குறித்து விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.
அதாவது, ஒரு சராசரி மனிதன் எவ்வாறு முதல்வர் ஆகிறான், அவன் தன்னுடைய வாழ்க்கையில் எவ்வளவு சவால்களை சமாளித்து உயர்ந்து வருகிறான் என்பது தான் முழு கதையாகும்.
இப்படத்திற்கு “ லீடர் ராமையா” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரு மொழிகளில் தயாரித்து வெளிவர இருக்கிறது.விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.