சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை தொடக்கம்! பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்களா?
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் காலகாலமாக பின்பற்றி வரும் நடைமுறையில் ஓன்று 10 வயது முதல் 50 வயது வரை பெண்கள் கோவிலுக்குள் செல்லவும் சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.அதனை எதிர்த்து கடந்த 2018 ஆம் தேதி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனைத்து வயது பெண்களும் எந்தவித தடையுமின்றி கோவிலுக்கு சென்று வழிபடலாம் என 2018 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசு முடிவெடுத்தது.அந்த முடிவிற்கு எதிராக மாநில அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக பாஜகவினர் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தினார்கள்.
அப்போது பலத்த பாதுகாப்புடன் பெண்கள் சிலர் சாமி தரிசனம் செய்தனர்.மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஏழு நிதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்ப கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது.அந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.
இந்நிலையில் சபரிமலை கோவிலில் வருடம் தோறும் மகர விளக்கு மண்டல பூஜை நடத்தப்படும் அந்த வகையில் நடப்பாண்டில் இந்த பூஜை வரும் 17ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.முந்தைய மார்க்சிஸ்ட் அரசியல் அமைச்சராக இருந்த ஜி.சுதாகரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் வழிபடுவதற்கு குறைந்தபட்ச வயது 50 தான் அதிலிருந்து குறைக்கப்படவில்லை.
ஐயப்பன் நித்திய பிரம்மச்சாரி என கூறப்படுவதால் 50க்கும் குறைவான வயது கொண்ட பெண்கள் அனுமதிக்கப்படவில்லை இந்த நடைமுறையை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.இதில் எந்த மாற்றமும் இல்லை என கூறியுள்ளார்.