டிவிசன் லீக் ஆக்கி! ஆர்.வி அகாடமி அணி வெற்றி! 

Photo of author

By Vijay

டிவிசன் லீக் ஆக்கி! ஆர்.வி அகாடமி அணி வெற்றி! 

Vijay

Updated on:

Make a division league! RV Academy Team Win! CDS beat Tirumal teams !!

டிவிசன் லீக் ஆக்கி! ஆர்.வி அகாடமி அணி வெற்றி!

முதலாவது டிவிசன் லீக் ஆக்கி போட்டியில் ஆர்.வி அகாடமி அணி   வெற்றிப் பெற்றுள்ளது. முதலாவது டிவிசன் லீக் ஆக்கி தொடர் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் சென்னை ஆக்கி சங்கம்  சார்பாக   நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற போட்டிகளில்  ஒரு ஆட்டத்தில் ஆர்.வி. அணியும் திருமால் கிளப் அணியும் மோதின. இதில் ஆர்.வி.அணி திருமால் கிளப் அணியை 7-2 என்ற கோல் விகிதத்தில் வென்றது.

இதில் ஆர்.வி.அணியின் சேது பாண்டியன், அமீன்சா தலா 2  கோலும்  விஜய், டினு ஆனந்த் , அருண் பாண்டியா தலா ஒரு கோலும் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர். திருமால் அணியில் வீரக்கண்ணன் 2  கோல் அடித்தார். மற்றொரு போட்டியில் ஆர்.வி.அணி சி.டி.எஸ் அணியை வென்றது. போட்டி ஆரம்பித்த 14-வது  நிமிடத்தில் ஆர்.வி.அணியின் அருண் பாண்டியா ஒரு கோல் அடித்தார். போட்டி முடிவில் 1 -0 கணக்கில் ஆர்.வி.அணி வென்றது.

இன்றைய ஆட்டங்களில் கனரக வாகன தொழிற்சாலை-சேப்பாக் யங்ஸ்டர்ஸ் (பகல் 12.15 மணி) , ரிசர்வ் வங்கி- அடையார் யுனைடெட் (பகல் 1.30 மணி), தமிழ்நாடு தபால்துறை – வேளச்சேரி கிளப் (பிற்பகல் 2.45 மணி), மெட்ராஸ் ரெஜிமென்ட் மையம் – ஆர்.வி.அகடாமி அணிகள் ( மாலை 4மணி) போன்ற அணிகள் மோதுகின்றன.