அடிக்குற வெயிலுக்கு இந்த பழத்தில் மில்க் ஷேக் செய்து குடிங்கள்!! உடல் சூடு தணிந்து புத்துணர்வு கிடைக்கும்!!

Photo of author

By Rupa

அடிக்குற வெயிலுக்கு இந்த பழத்தில் மில்க் ஷேக் செய்து குடிங்கள்!! உடல் சூடு தணிந்து புத்துணர்வு கிடைக்கும்!!

மார்ச் மாதத்தில் கோடை காலம் தொடங்கிய நிலையில் தாங்க முடியாத அளவு வெயிலின் தாக்கம் உள்ளது.சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கி வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து இருக்கிறது.இன்னும் 27 நாட்களுக்கு வெயில் மண்டையை பிளக்கும் அளவிற்கு கடுமையாக இருக்கும் என்பதினால் மக்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும்.

இயற்கையான முறையில் கிடைக்க கூடிய குளிர்ச்சி நிறைந்த பொருட்களை உண்பது,மில்க் ஷேக்,பழ சாறு போன்றவற்றை செய்து அருந்தி வருவது உடலுக்கு நல்லது.

தேவையான பொருட்கள்:-

1)அன்னாசி பழ துண்டுகள் – 1 கப்
2)உலர் திராட்சை – 10
3)தேங்காய் துருவல் – 1/2 கப்
4)சர்க்கரை – தேவையான அளவு
5)ஐஸ்கட்டி – தேவையான’அளவு

அன்னாசி மில்க் ஷேக் தயாரிக்கும் முறை:-

முதலில் ஒரு மீடியம் சைஸ் அன்னாசி பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் நறுக்கிய அன்னாசி பழ துண்டுகளை போட்டு மைய்ய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளவும்.

பின்னர் அதே மிக்ஸி ஜாரில் உலர் திராட்சை,சர்க்கரை மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து அன்னாசி பேஸ்ட்டில் கலக்கவும்.

அதன் பிறகு 1/2 கப் அளவு துருவிய தேங்காயை மிக்ஸி ஜாரில் போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.

இந்த தேங்காய் பாலை அரைத்த அன்னாசி கலவையில் சேர்த்து ஒருமுறை கலக்கவும்.பிறகு தேவையான அளவு ஐஸ்கட்டி சேர்த்தால் உடலுக்கு குளிர்ச்சியூட்டும் சுவையான அன்னாசி மில்க் ஷேக் தயார்.இதை வெயில் காலத்தில் அடிக்கடி குடித்து வந்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.