நிம்மதியான வாழ்க்கைக்கு நிரந்தரமான சில வழிகள்..!!!
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் பணம், பொருள் மற்றும் பல வசதி வாய்ப்புகளை அடைந்தாலும், கடைசிவரை நிம்மதியை மட்டும் தேடிக் கொண்டிருக்கிறான். ஏனெனில், அந்த நிம்மதிதான் பலரின் வாழ்க்கையை பயனுள்ளதாகவே வைத்துள்ளது.
“சாப்பிடும் போதும், சாகும் போதும்” மனிதனுக்கு நிம்மதி வேண்டும் என்று ஒரு சொலவடை உண்டு..!
நிரந்தரமான நிம்மதிக்கு சில வழிகள் :
* உங்களுக்கு தெரிந்த தியானத்தை தினமும் காலையில் கடைபிடியுங்கள், இது உங்கள் மனதை அமைதி வழிக்கு கொண்டு செல்லும்.
* ஏமாற்றத்தையும், தோல்வியையும் எப்போதும் எதிர்பார்த்தே இருங்கள். இது உங்களை கவலையில் சிக்காமல் வைத்திருக்கும். இதுவும் ஒரு வகை நிம்மதிதான்.
* எவரிடமும் பொறாமை கொள்ளாதீர்கள், பிறரிடம் இருக்கும் நல்ல குணத்தை பாரட்டுங்கள். (பொறாமை…இந்த வார்த்தையை திருப்பிப் போட்டால் “மைறாபொ” என்று ஒரு அர்த்தம் தருகிறது)
* உங்களுக்கு பிடித்த செல்லப் பிராணியை வளருங்கள், செல்லப் பிராணிகளால் உலகத்தில் மகிழ்ச்சி அடையாதவர்களே இல்லை எனலாம். இதன் மூலம் உங்களுடைய மன அழுத்தம், கவலை மறந்து நிம்மதி கிடைக்கும்.
* மனதை எப்போதும் பூட்டி வைக்காதீர்கள் இசை கேட்பது, பாடுவது, ஆடுவது, பிடித்த இடத்தில் சற்று நேரம் அமர்வது, நல்ல நண்பர்களுடன் உரையாடுவது, நல்ல புத்தகங்களை படிப்பது போன்ற உங்கள் மனதிற்கு பிடித்த ஏதேனும் ஒன்றை தினமும் செய்யுங்கள்.
* பிறருடைய பாராட்டிற்கு ஏங்காதீர்கள், நல்ல செயலுக்காக பிறரை மனமுவந்து பாராட்டுங்கள். இது மற்றவரிடம் உங்கள் மீதான மதிப்பை கூட்டி, அவரை மீண்டும் சந்திக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியான சந்திப்பாகவே இருக்கச் செய்யும்.
* உங்களால் எதை செய்ய முடியுமோ அதை சரியாக செய்யுங்கள், தேவையற்ற விசயங்களை சவாலாக ஏற்றுக் கொள்ளாதீர்கள், இதனால் புதிய சிக்கல் உண்டாகி வெறுப்பு மனநிலை வந்துவிடும்.
* பிறருக்கு தேவையானதை விட்டு கொடுங்கள், உங்களுக்கு தேவை இல்லாததை விட்டு விடுங்கள். இதனால் மன அமைதி கிடைக்கும்.
குறிப்பு : முடிந்தவரை எல்லோரிடமும் புன்னகை சிந்துங்கள் இதனால் புதிய நிம்மதி கிடைக்கலாம்.