பெரும்பாலானோருக்கு உடல் ஒல்லியாக இருந்தால் வயிற்று பகுதி மட்டும் பெருத்து காணப்படுகிறது.இதற்கு நாம் பின்பற்றும் உணவுமுறையே முக்கிய காரணமாகும்.உடலில் கொழுப்பை சேர்க்கும் உணவுகளை அதிகளவு உட்கொள்வதால் தான் உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகிறது.
முன்பெல்லாம் 40 வயதை கடந்தவர்களுக்கு தான் தொப்பை பிரச்சனை ஏற்படும்.ஆனால் தற்பொழுது இளம் வயதினரே தொப்பை பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு தங்களுக்கு பிடித்த பிட்டான உடைகளை அணிய முடிவதில்லை என்பது பலரின் வருத்தமாக இருக்கின்றனர்.
இந்த தொப்பை கொழுப்பை கரைக்க இலவங்கபட்டை பால் பருகலாம்.தொடர்ந்து ஒரு மாத காலம் ஆரோக்கிய உணவுடன் இலவங்கபட்டை பால் செய்து பருகி வந்தால் தொப்பை கொழுப்பு வேகமாக குறைந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)பசும் பால் – ஒரு கிளாஸ்
2)இலவங்கப்பட்டை துண்டு – ஒன்று
3)தேன் – கால் தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
**முதலில் ஒரு துண்டு இலவங்கப்பட்டையை வாணலியில் போட்டு சிறிது சூடாகும் வரை வறுக்க வேண்டும்.
**பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
**பின்னர் ஒரு கிளாஸ் அளவு பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பால் கொதி வரும் சமையத்தில் அரைத்த இலவங்கப்பட்டை பொடியை கொட்டி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
**இலவங்கப்பட்டை பால் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு இந்த பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.
**பிறகு பாலில் கால் தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து குடிக்க வேண்டும்.விருப்பப்பட்டால் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.இல்லையேல் அப்படியே இலவங்கப்பட்டை பால் பருகலாம்.
**தொடர்ந்து ஏழு தினங்கள் இந்த இலவங்கப்பட்டை பால் பருகி வந்தால் தொப்பை கொழுப்பு குறைந்துவிடும்.
**மேலும் அதிக கொழுப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.தினமும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும்.தொப்பை கொழுப்பை கரைக்கும் எளிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தாலே தொப்பை கொழுப்பு குறைந்து ஸ்லிம்மான தோற்றம் கிடைக்கும்.
**தினமும் காலை நேரத்தில் வெது வெதுப்பான நீர் பருகி வந்தால் உடல் கொழுப்பு கரைந்துவிடும்.