மனிதர்களுக்கு கோபம்,மன அழுத்தம் ஏற்படுவது இயல்பாக நடக்க கூடிய விஷயம்.ஆனால் இந்த செயல்கள் தொடர்ந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டுவிடும்.
இந்த உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வர கடுக்காய் மற்றும் சீரகத்தை பயன்படுத்தி தேநீர் செய்து குடிக்கலாம்.கடுக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் பித்தம்,வாதம்,கபம் போன்ற பாதிப்புகளை குணமாக்குகிறது.அதோடு இரத்தம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை சரி செய்கிறது.அதேபோல் இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற சீரகம் பெரிதும் உதவுகிறது.அது மட்டுமின்றி செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
தேவையான பொருட்கள்:-
*சீரகம் – ஒரு தேக்கரண்டி
*கடுக்காய் – ஒன்று
செய்முறை விளக்கம்:
ஸ்டெப் 01:
நாட்டு மருந்து கடையில் கடுக்காய் கிடைக்கும்.தங்களுக்கு போதுமான அளவு வாங்கிக் கொள்ளவும்.
ஸ்டெப் 02:
இந்த கடுக்காயில் ஒன்றை எடுத்து உரல் அல்லது மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு இடித்துக் கொள்ளவும்.
ஸ்டெப் 03:
பிறகு அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.பிறகு இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் கொட்டி பவுடர் பதத்திற்கு அரைக்கவும்.
ஸ்டெப் 04:
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.
ஸ்டெப் 05:
தண்ணீர் சூடானதும் அரைத்த சீரகப் பொடி மற்றும் கடுக்காய் பொடி சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
ஸ்டெப் 06:
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சுவைக்காக தேன் அல்லது கருப்பட்டி சேர்த்து குடித்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.