காலையில் எழுந்ததும் இந்த ஜூஸ் செய்து குடிங்க!! உடல் எடை நம்ப முடியாத அளவு குறையும்!!

Photo of author

By Divya

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் ஒரு கிளாஸ் அருகம்புல் ஜூஸ் செய்து பருகி வரலாம்.அருகம்புல்லில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.இந்த புல்லை அரைத்து சாறாக பருகி வந்தால் மலச்சிக்கல்,வாயுத் தொல்லை போன்றவை அகலும்.

தினம் ஒரு கிளாஸ் அருகம்புல் ஜூஸ் பருகி வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் இந்த அருகம்புல்லில் ஜூஸ் செய்து பருகி வந்தால் அனைத்து பாதிப்புகளும் குணமாகிவிடும்.

அருகம்புல்லில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்:

*கால்சியம் *புரதம் *கார்போஹைட்ரேட் *நார்ச்சத்து *பொட்டாசியம்

அருகம்புல் ஜூஸ் செய்வது குறித்து செய்முறை விளக்கம்:

தேவையான பொருட்கள்:-

1)அருகம்புல் – ஒரு கைப்பிடி
2)தண்ணீர் – ஒரு கப்
3)தேன் – ஒரு தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:-

செய்முறை 01:

*முதலில் நன்கு சுத்தமான இளம் அருகம்புல்லை பறித்து சேகரித்துக் கொள்ளுங்கள்.அடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.

செய்முறை 02:

*இந்த அருகம்புல்லில் தண்ணீர் ஊற்றி நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை 03:

*அருகம்புல் நன்கு அரைபட்டு சாறை மட்டும் தனியாக ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.

செய்முறை 04:

*பின்னர் இந்த அருகம்புல் சாறில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பருகி வந்தால் உடல் எடை குறைந்து ஹீரோயின் போன்று ஸ்லிம்மாக தெரிவீர்கள்.

அதேபோல் அருகம்புல்லை அரைத்து சாறு எடுத்து ஒரு கிளாஸ் சுடுநீரில் கலந்து பருகினால் மலச்சிக்கல் முற்றிலும் குணமாகும்.இந்த அருகம்புல் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் பருகினால் வயிற்றில் உள்ள கெட்ட வாயுக்கள் வெளியேறி குடல் ஆரோக்கியமாக இருக்கும்.இவ்வாறு அருகம்புல்லை அன்றாட வாழ்வில் எடுத்துக் கொண்டால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம்.