100 வயதிலும் மூட்டு இரும்பு போல் திடமாக.. தினமும் இந்த ஒரு கஞ்சி செய்து குடிங்க!!

Photo of author

By Divya

100 வயதிலும் மூட்டு இரும்பு போல் திடமாக.. தினமும் இந்த ஒரு கஞ்சி செய்து குடிங்க!!

Divya

உங்கள் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்க உளுந்து பருப்பு,அரிசி போன்ற பொருட்களை கொண்டு கஞ்சி செய்து குடிக்கலாம்.இந்த கஞ்சி மூட்டு இணைப்பை வலுப்படுத்த உதவும்.உளுந்து பருப்பில் இருக்கின்ற ஊட்டச்சத்து உடல் வலிமையை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)உளுந்து பருப்பு – கால் கப்
2)அரிசி – ஒரு தேக்கரண்டி
3)இஞ்சி – ஒரு துண்டு
4)வெல்லம் – கால் கப்
5)துருவிய தேங்காய் – நான்கு தேக்கரண்டி
6)ஏலக்காய் – ஒன்று
7)பசும் பால் – கால் கப்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் கருப்பு உளுந்தை வாணலி ஒன்றில் போட்டு பொன்னிறம் வரும் வரை வறுக்க வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

2.அடுத்து ஒரு தேக்கரண்டி அரிசியை மிக்சர் ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து கால் கப் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து கால் கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

3.பின்னர் அரைத்த உளுந்து பருப்பு மற்றும் அரிசி பொடியை அதில் கொட்டி கலந்துவிட வேண்டும்.பிறகு ஒரு துண்டு இடித்த இஞ்சியை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

5.அடுத்து ஒரு ஏலக்காயை இடித்து அதில் சேர்க்க வேண்டும்.அதன் பிறகு வெல்லத் தூளை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.உளுந்து கஞ்சி கெட்டி படாமல் கொதிக்க வைக்க வேண்டும்.

6.அடுத்து துருவிய தேங்காயை அதில் போட்டு கலக்க வேண்டும்.இந்த உளுந்து கஞ்சி நன்கு கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.இந்த கஞ்சியை கிண்ணத்தில் ஊற்றி பருகி வந்தால் மூட்டு வலி குணமாகும்.எலும்புகள் வலிமை அதிகரிக்க உளுந்து பருப்பில் கஞ்சி செய்து குடிக்கலாம்.