உங்கள் குழந்தை கொழு கொழுன்னு வளர.. இந்த கிழங்கில் அல்வா செய்து கொடுங்க!!

Photo of author

By Divya

உங்கள் குழந்தை கொழு கொழுன்னு வளர.. இந்த கிழங்கில் அல்வா செய்து கொடுங்க!!

Divya

குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க புரதம்,கொழுப்பு போன்ற சத்துக்கள் உள்ள உணவுகளை கொடுக்க வேண்டும்.நெயில் வறுத்த பொருட்களை சாப்பிட கொடுத்தால் குழந்தைகள் உடல் எடை அதிகரிக்கும்.

கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிட கொடுக்கலாம்.உலர் விதைகள் மற்றும் பழங்களை பாலில் கலந்து கொடுக்கலாம்.சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அல்வா செய்து கொடுத்தால் குழந்தைகள் உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள:-

1)சர்க்கரை வள்ளிக்கிழங்கு
2)பேரிச்சம் பழம்
3)நெய்
4)வெள்ளை ரவை
5)பாதாம் பருப்பு
6)முந்திரி
7)நாட்டு சர்க்கரை

செய்முறை விளக்கம்:-

ஒரு முழு பேரிச்சம் பழம்,நான்கு பாதாம் பருப்பு மற்றும் நான்கு முந்திரி பருப்பை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.

மறுநாள் ஒரு சர்க்கரை வள்ளிக்கிழங்கை தண்ணீரில் போட்டு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைக்க வேண்டும்.

பிறகு சர்க்கரை வள்ளிக்கிழங்கை மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு மிக்சர் ஜாரில் இந்த மசித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு சேர்த்து பாதாம் பருப்பு,முந்திரி பருப்பு மற்றும் பேரிச்சம் பழம் போட்டு பேஸ்ட் பக்குவம் வரும் வரை அரைக்க வேண்டும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.அதன் பின்னர் கால் கப் வெள்ளை ரவையை போட்டு குறைந்த தீயில் வறுக்க வேண்டும்.ரவை பொன்னிறமாக வறுபட்டு வந்த பிறகு அரைத்த சர்க்கரவள்ளிக்கிழங்கு பேஸ்டை அதில் போட்டு கிளற வேண்டும்.

அதன் பின்னர் 20 கிராம் நாட்டு சர்க்கரை அல்லது வெள்ளை பனங்கற்கண்டு போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.கலவை சுண்டி அல்வா பதத்திற்கு வரும் வரை கிளற வேண்டும்.இந்த அல்வா ஆறிய பிறகு குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும்.

குழநதைகளின் உடல் எடையை அதிகரிக்கும் அற்புத உணவாக இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகமாகும்.