இந்த பூவில் டீ தயாரித்து குடியுங்கள்! பல்வேறு பிரச்சனை தீரும்!

0
233
#image_title

காலையில் எழுந்தவுடன் பல்லை துலக்கிருமோ இல்லையோ டீ காபியை தான் மனம் தேடுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் காபியில் உள்ள பாதிப்புகள் நமக்கு தெரிவதில்லை. உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டீ, காபி அருந்துவது குறைந்து கொண்டே வருகிறது. அதன் தொடர்ச்சியாக மக்கள் ” “கிரீன் டீ” அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்

 

உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள ” கிரீன் டீ” உதவுவதாக நம்பப்படுகிறது.தினமும் காலையில் பருகுவதால், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேற்றப் பட்டு, புத்துணர்ச்சி தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்ட் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது அதேபோல், இயற்கை ஆர்வலர்களால் குறிப்பிடப்படும் இன்னொரு வகை

 

,. ” புளு டீ ” ஆகும். நீல நிற சங்குப்பூவின் மூலம் தயாரிக்கப்படுவதே ” புளு டீ” -ன் சிறப்பு

 

” புளு டீ ” தயாரிக்கும் முறை:

“கிரீன் டீ” தயாரிப்பது போன்றே இதையும் தயாரிக்க வேண்டும். .

கொதிக்க வைத்த தண்ணீரில் சில நீலநிற சங்குப்பூக்களை போட்டு, ஐந்து நிமிடம் கழித்து, இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதில் எலுமிச்சம் பழச்சாறு சில சொட்டுகள் விட்டு, தேவையான அளவு சுத்தமான தேன்கலந்து சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பருகலாம்.

 

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், சிகிச்சை பெறும் நோயாளிகள் ஆகியோர் கட்டாயம் தகுந்த ஆலோசனையின்றி ” புளு டீ” அருந்த வேண்டாம்.

 

புளு டீ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது.

இதில் ஆன்டி— கிளைகேஷன் இருப்பதால், வயது முதிர்வைத் தடுத்து, இளமையை பாதுகாத்துக்கொள்ள உதவுவதாக நம்பப்படுகிறது.

தலையின் மேற்புறத்தில் உள்ள நுண் துளைகளில் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி வளர்ச்சியை தூண்டக்கூடியது.

உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கி கல்லீரலை பாதுகாக்கிறது.

நீரிழிவு நோயாளிகளின் உடலில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

” புளு டீ” யில் உள்ள ” ஃப்ளேவனாய்ட்ஸ் என்ற ரசாயனம் புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது.

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

நோய்த் தொற்றுக்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றும் ஆற்றல் அதற்கு உண்டு.

அஜீரணத்தை குணமாக்க வல்லது.

வயிற்றில் உண்டாகும் புண், எரிச்சல் ஆகியவற்றை தடுக்கிறது.

உடலின் வெப்ப நிலையைச் சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

மன அழுத்தத்தைக் தவிர்க்க உதவுகிறது.

 

.

Previous article14 ஆண்டுகள் படுக்கையில் இருந்த இயக்குனர் ஶ்ரீதரை பார்த்து கொண்டவர் இவர்!
Next article15 நாட்களில் முழுமையாக தைய்ராய்டு சரியாகிவிடும்! இரண்டே பொருள்!