உங்கள் நுரையீரல் இரும்பு போன்ற வலுவாக இருக்க.. இந்த உணவுகளை அவசியம் சாப்பிடுங்கள்!!

Photo of author

By Divya

உங்கள் நுரையீரல் இரும்பு போன்ற வலுவாக இருக்க.. இந்த உணவுகளை அவசியம் சாப்பிடுங்கள்!!

நாம் உயிர்வாழ காற்று மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.நுரையீரல் நமது உடலின் மற்ற பாகங்கள் சிறப்பாக செயல்பட உதவுகிறது.இந்நிலையில் புகைபிடித்தல்,மாசைடைந்த காற்றை சுவாசித்தல் போன்ற காரணங்களால் நமது நுரையீரலின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி உள்ளது.

ஆஸ்துமா,நுரையீரல் புற்றுநோய்,சுவ பிரச்சனை போன்ற காரணத்தினால் உலகில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது.இந்நிலையில் நமது நுரையீரலை பாதுகாக்க உதவும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது நமது கடமையாகும்.

1)ஆப்பிள்கள்

ஆப்பிள் அனைவருக்கும் பிடித்த ஒரு பழமாகும்.இதில் இருக்கின்ற பினோலிக் மற்றும் பிளவனாய்டுகள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

2)கிரீன் டீ

டயட் இருப்பவர்கள் விரும்பி அருந்தும் க்ரீன் டீயில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது.இதை தொடர்ந்து பருகி வந்தால் நுரையீரல் வீக்கம் குணமாகும்.

3)கெளுத்தி மீன்

நுரையீரலில் ஏற்படும் தொற்றுகள் நீங்க அடிக்கடி கெளுத்தி மீனை சாப்பிட்டு வரலாம்.

4)நட்ஸ் மற்றும் விதைகள்

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேர்க்கடலை,வால்நட்,பாதாம்,முந்திரி,பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளும்,பூசணி,ஆளி,சியா,சூரிய காந்தி போன்ற விதைகளும் பெரிதும் உதவுகிறது.இந்த நட்ஸ் மற்றும் விதைகளில் இருக்கின்ற மெக்னீசியம் சுவாச பாதைகளில் ஏற்படும் தொற்று பாதிப்புகளை குணமாக்க உதவுகிறது.

​5)ஆலிவ் எண்ணெய்

இந்த எண்ணெயில் சமைத்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நுரையீரலில் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும்.

6)​இஞ்சி

நுரையீரலில் இருக்கின்ற நச்சுக் கழிவுகளை அகற்ற இஞ்சி பெரிதும் உதவுகிறது.எனவே அடிக்கடி இஞ்சி தேநீர் அருந்துவது நன்மையை கொடுக்கும்.

7)பூண்டு

பூண்டில் இருக்கின்ற பிளேவனாய்டுகள் நுரையீரலில் தேங்கி கிடக்கும் நச்சுக் கழிவுகளை அகற்றி அதன் செயல்பாட்டை மேம்படுகிறது.