இஸ்லாமியர்கள் பொங்கல் கொண்டாட கூடாது! அறிக்கையால் தமிழர்கள் அதிர்ச்சி?

0
223

இஸ்லாமியர்கள் பொங்கல் கொண்டாட கூடாது! அறிக்கையால் தமிழர்கள் அதிர்ச்சி?

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் மிக முக்கியமானது பொங்கல் பண்டிகையாகும். இந்த பொங்கல் பண்டிகையை உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்கள் மட்டுமல்லாமல் பிற மதத்தினை ஏற்ற தமிழர்களும் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், பொங்கல் விழா என்பது இந்துக்களின் பண்டிகையாகும் எனவே, இந்த பண்டிகையை மலேசியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் யாரும் கொண்டாட கூடாது என்று “மலேசிய இஸ்லாமிய வளர்ச்சி அமைச்சகம்” வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, மலேசியாவின் கல்வி நிறுவனங்களிலும், பள்ளிகளிலும் பொங்கல் பண்டிகையை இஸ்லாமியர்கள் தவிர்க்க வேண்டும் எனவும், கல்வி மற்றும் பள்ளிகளில் பொங்கல் பண்டிகை நடைபெற்றால் அதில் இஸ்லாமியர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று அனைத்து பள்ளிகளுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டது.

இந்த அறிக்கையானது மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு கழகத்தின் தலைவர், காசிம் என்பவரால் அனுப்பிய அறிக்கையாகும். இது சம்பந்தமாக காசிம் கூறியதாவது: மலேசிய அரசு பள்ளிகளில் இஸ்லாமிய மாணவர்கள் பிற இந்து மாணவர்களுடன் பொங்கல் கொண்டாடுவது மாணவர்களின் பெற்றோர்களுக்கு பிடிக்கவில்லை என்றும்,

அதுமட்டுமல்லாமல், பொங்கல் பண்டிகை இந்து மதம் சார்ந்த பண்டிகை என்பதால் இந்த அறிக்கை வெளியிட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மலேசிய பள்ளிகளில் இனி பொங்கல் கொண்டாடுவது குறைந்துவிடும் என்று கூறப்படுகிறது. இந்த அறிக்கை மலேசிய தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் இந்து, கிறித்தவம், இஸ்லாம் என தனித்தனி மதமாக இருந்தாலும் வருடந்தோறும் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் ஒவ்வொரு தைப் பொங்கலுக்கும் தமிழர்களுக்கு வாழ்த்து சொல்லியது குறிப்பிடத்தக்கது.

Previous articleஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; காங்கிரஸ் & பாஜக ஆகிய இரு கட்சிகளையும் விமர்சித்த மாயாவதி !
Next articleபொங்கல் பண்டிகையின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க உதவும் Helo ஆப்