சேலம் மாவட்டத்தில் குட்டையில் ஆண் சடலம் மீட்பு! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!

Photo of author

By Parthipan K

சேலம் மாவட்டத்தில் குட்டையில் ஆண் சடலம் மீட்பு! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!

Parthipan K

Male body found in puddle in Salem district People in the area in a frenzy!

சேலம் மாவட்டத்தில் குட்டையில் ஆண் சடலம் மீட்பு! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!

கொங்கணாபுரம் அருகே உள்ள அத்தியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர்  முத்து.  இவர் 15 நாட்களுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகன் வெங்கடேஷ் (36) இவர் லாரி ஓட்டுநர். தந்தையின் இறுதிச் சடங்கிற்கு வர முடியாமல் வட மாநிலத்தில் மாட்டிக் கொண்டார். நேற்று லாரியில்லியருந்து சொந்த ஊருக்கு வந்தார். தனது தந்தை இறந்த துக்கத்தை தாங்காமல் தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூர் ரவுண்டானா அருகே உள்ள பாலத்தில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததால் மது போதை அதிகமாகி அருகில் உள்ள குட்டையில் தவறி விழுந்தார்.

இரவு நேரம் என்பதால் யாரும் அந்த வழியாக செல்லவில்லை. காலையில் அந்த வழியாகச் செல்லும் நபர்கள் குட்டையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்து அந்த ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அவர் கொங்கணாபுரத்தைச் சேர்ந்தவர் என்றும் மது போதை அதிகமாகி தான் விழுந்துள்ளார் என்றும் தெரியவந்தது. அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.