வசூல் சாதனை படைத்த மாமன்னன்!! படக்குழு அறிவிப்பு!!

Photo of author

By Jeevitha

வசூல் சாதனை படைத்த மாமன்னன்!! படக்குழு அறிவிப்பு!!

Jeevitha

Updated on:

Mamannan who has record of wealth!! Crew announcement!!

வசூல் சாதனை படைத்த மாமன்னன்!! படக்குழு அறிவிப்பு!!

மாமன்னன் என்ற திரைப்படம் மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ் அரசியல் பற்றிய படம் ஆகும். மேலும் இந்த படத்தில் உதயநிதி நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் பகத் பாசில், வடிவேலு பிரபல நடிகர்களும் நடித்துள்ளார்கள்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹுமான் இசை அமைத்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளிவந்தது. இத்திரைப்படம்  அழுத்தமான அரசியல் கருத்துகளை உள்ளடக்கிய படமாகும். இந்த படம் வந்து இன்னும் திரை அரங்குகளில் ஓடி  ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தையும், நல்ல வசூலையும் பெற்றுள்ளது. வைகை புயல் வடிவேல் தனது சிறந்த நடிப்பால் படத்தை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். மேலும் இந்த படம் வெளிவந்து நாள் முதல் இந்த படத்தை பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த திரைப்படம் 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியது.

ஆனால் இந்த படம் வெளிவந்த முதல் நாளே 10 கோடி ரூபாய் வசூலை பெற்றது. மேலும் படம் தற்போது வரை  50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாமன்னன் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.