மேற்கு வங்கத்தில் ஆறு மாதத்திற்கு அரிசி இலவசம் மம்தா அறிவிப்பு

0
119

மேற்கு வங்கத்தில் ஆறு மாதத்திற்கு அரிசி இலவசம் மம்தா அறிவிப்பு

கொரோனோ வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் இந்திய அரசாங்கம் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநில அரசுகளும் தங்களின் பங்கிற்கு பல்வேறு கட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளன.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டுவர மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பால் மக்கள் வேலைக்கு செல்ல இயலாததால் பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்த மேற்கு வங்க அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் ஆறு மாதத்திற்கு இலவசமாக அரிசி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் பேசிய மம்தா அவர்கள் அரசின் சார்பாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட அரசு சார்பில் வங்கி கணக்கு துவங்கப்பட உள்ளது இதில் தன்னார்வலர்கள் நிதி செலுத்தலாம் என தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசு மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும் என்றும் மேற்கு வங்கத்திற்கு கூடுதல் நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

Previous articleகல்லூரி காலத்திலேயே குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் லாஸ்லியா : இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Next articleபிரபலம் ஆகலாம் என பேசி வம்பில் மாட்டிக் கொண்ட பிரசன்னா பதவியை பறிக்க திமுக தலைமை முடிவு