16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது !!

Photo of author

By Parthipan K

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது !!

Parthipan K

சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டை, புத்தா செட்டி தெருவை சேர்ந்த மாசிலாமணி என்பவரின் மகன் சூர்யா ,அதே பகுதியில் கூலி பணிக்கு சென்று வந்துள்ளார்.

கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் 5-வது தெரு வை சேர்ந்த 16 வயது சிறுமி, தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கமாக இருந்துள்ளது. சிறுமியின் சொந்த ஊரானது ராமநாதபுரம் ஆகும் .இவ்விருவருக்கும் பழக்கம் எற்பட்டது. மேலும், அந்த சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதனால் அந்த சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.புகாரின் பெயரில் சூரியாவை அழைத்து விசாரித்த பொழுது சூரியவும்,16 வயது சிறுமியுடன் தனிமையில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் சூர்யா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.