தகாத உறவா..?- மனைவிக்கு நேர்ந்த கொடூரம்..!

Photo of author

By CineDesk

சதேகத்தின் உச்சத்தால் மனைவியின் பிறப்புறுப்பை அலுமிய நுலால் கணவன் தைத்த கொடூரம் உத்திரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தில் உள்ள ராம்பூரில் தான் அந்த துயர சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. ராம்பூரில் உள்ள மிலக் பகுதியில் திருமணமான சில நாட்களிலேயே தனது மனைவி மீது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் சதேகம் எனும் பேய் உச்சக்கட்டத்தை எட்ட, அந்த பெண்ணின் கை மற்றும் கால்களை கட்டி, அவரது பிறப்புறுப்பை அலுமிய நூலால் தைத்துள்ளான். அதிக ரத்த போக்கு ஏற்பட அந்த அரக்க கணவன் ஓடியுள்ளான்.

அந்த பெண் வலியிலும் முயற்சித்து நடந்த சம்பவம் குறித்து தனது தாய்க்கு தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த பெண்ணின் வீட்டிற்கு விரைந்த தாய், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். பின்னர் தனது மகளுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து மிலக் காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதையடுத்து, கொடூர சமவத்தை அரங்கேற்றிய கணவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு முன்னதாகவே தனது மனைவிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருக்குமா என சந்தேகித்த அவன், தினமும் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த நிலையில் உடனே இறந்துள்ளது. இது தொடர்பாக பேசிய, ராம்பூரின் எஸ்.பி. ஆன ஷோகன் கவுதம் “ மருத்துவ பரிசோதனையில் அந்த பெண்ணிற்கு பலத்த காயம் அடைந்திருப்பது தெரிய வந்தது. நாங்கள் அவரது கணவரை கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மாவட்ட மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது “ என கூறினார்.