தலைகீழாக உள்ள தலையுடன் பிறந்து சவாலாக வாழ்ந்து வரும் நபர் ஒருவர் தனது 44வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.
40 ஆண்டுகளுக்கு முன்பு பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள பஹியா என்ற மாநிலத்தில் அதிசய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தையை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். காரணம் மனிதனுக்கு முன்பகுதியில் தலை இருக்கும். ஆனால் அந்த குழந்தைக்கோ முதுகு பிறமாக தலைக்கீழாக தலை இருந்துள்ளது. அத்துடன், இரு கைகளும் நீட்ட முடியாதப்படி மார்பகங்களுடன் இணைந்தப்படி உள்ளன. அதேபோல் கால்களும் வளர்ச்சியற்று காணப்பட்டுள்ளன. ஆர்த்ரோகிரிபோசிஸ் மல்டிபிளக்ஸ் கன்ஜெனிடா என்ற நோயால் பாதிக்கப்பட்ட இந்த குழந்தையின் தலை நேராக நிற்காது, பின்புறமாக முதுகில் சாய்ந்தபடி தலைகீழாக தான் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், 24 மணி நேரம் மட்டுமே அந்த ஆண் குழந்தை உயிருடன் இருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் விநோத உருவத்துடன் பிறந்த அந்த குழந்தை மருத்துவர்களின் கணிப்பையும் மீறி உயிர் வாழ தொடங்கியுள்ளது. அந்த குழந்தைக்கு Claudio Vieira de Oliveira என அவரது தாய் பெயரிட்டு பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். குழந்தை பருவத்தில் மற்றவர்களை போல் சாதரணமாக இருக்க முடியாமல் சிரமப்பட்ட ஒலிவேராவுக்கு ஆதரவாக அவரது தாய் இருந்துள்ளார். ஒலிவேரா பள்ளிக்கு செல்ல முடியாததால் தானே ஆசிரியராக மாறி அவருக்கு கற்பிக்கவும் தொடங்கியுள்ளார். பாடத்தை தவிர்த்து தன்னம்பிக்கையையும் வெளிவேராவுக்கு அவரது தாய் அளித்துள்ளார்.
தனது தாய் அளித்த தன்னம்பிக்கையால் தன்னுடைய இந்த குறையை பெரிதாக கருதாமல் மற்றவர்களின் மனதில் தீவிர நம்பிக்கையை விதைத்து வருகிறார் ஒலிவேரா. ஒரு மேடைப்பேச்சாளராக இருக்கும் ஒலிவேரா இதுவரை 2000 க்கும் மேற்பட்ட மேடைகளில் பேசிமாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஊக்கமளித்துள்ளார். தன் வாழ்க்கை பிறருக்கு நம்பிக்கை விதைக்க வேண்டும் என்ற நோக்குடன் தனது சுயசரிதையை புத்தகமாகவும் ஒலிவேரா எழுதியுள்ளார். உடல் ஊனத்தை பொருட்படுத்தாமல் எப்பொழுதும் பரபரப்புடன் இருக்கும் ஒலிவேரா, கொரோனா பரவல் காரணாமாக வீட்டிலேயே முடங்கினார்.
இந்த நிலையில் தனது 44 வது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடிய ஒலிவேரா பலருக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார் என்றே கூறலாம்.