ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..!! இனி இந்த பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்..!!

0
183
tn ration shops

தமிழக அரசு ரேஷன் கடைகளில் அரசி, பருப்பு, கோதுமை, பாமாயில் உள்ளிட்டப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு எந்த ஒரு நிவாரணப் பொருட்கள் கொடுத்தாலும் அது ரேஷன் கடைகள் வாயிலாக தான் மக்களை சென்றடைகிறது. அதுமட்டுமல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்புகள், நிதிகள் உள்ளிட்ட பொருட்களும் ரேஷன் கடை (tn ration shop) வாயிலாக தான் மக்களுக்கு போய் சேருகிறது.

இந்நிலையில் சமீப காலங்களாக ரேஷன் பொருட்கள் மக்களுக்கு முறையாக கிடைப்பதில்லை உள்ளிட்ட தகவல்களும் வந்துக்கொண்டிருந்தது. இதனை தடுப்பதற்காக தமிழக அரசு இலவச அலைபேசி புகார் தெரிவிக்கும் எண்களை அறிவித்திருந்தது. இதன் மூலம் ரேஷன் பொருட்கள் முறையாக சென்றடையாதவர்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தது.

அந்த வகையில் இந்த ஆண்டு 2024 மே மாதத்திற்கான ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில், கோதுமை உள்ளிட்டவை இந்த மாதம் இறுதிக்குள் 100 சதவீதம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த மே மாதம் வழங்க வேண்டிய துவரம் பருப்பு, பாமாயில் பாக்கெட், கோதுமை உள்ளிட்ட பொருட்களில் தட்டுப்பாடு ஏற்பட்டதால் புகார் எழுந்த நிலையில் இந்த மாதம் இறுதிக்குள் 100 சதவீதம் முழுமையாக மக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க: இனி லைசென்ஸ் வாங்க ஆர்டிஓ ஆபீஸ் செல்ல வேண்டாம்..!! தனியார் பயிற்சி நிறுவனங்கள் வழங்கும்!!