மனைவியின் நடத்தை சரியில்லை என சொல்லிய ஜோதிடர் ! நம்பிய கணவர் செய்த கொடூரம் !!

Photo of author

By Parthipan K

மனைவியின் நடத்தை சரியில்லை என சொல்லிய ஜோதிடர் ! நம்பிய கணவர் செய்த கொடூரம் !!

தென்காசியில் ஜோதிடர் சொன்னதை நம்பிய கணவர் ஒருவர் மனைவியையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

ஜோதிடம் என்பது உண்மையா ? பொய்யா ? என்பது அடுத்த விஷயம். ஆனால் அதற்கு ஒரு எல்லை உண்டு. எந்தெந்த விஷயத்தில் ஜோதிடத்தை நம்பலாம் ? எந்தெந்த விஷயத்தில் அது தேவையில்லை என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் அது நம் வாழ்க்கையில் தேவையில்லாத பிரச்சனைகளைக் கொண்டு வந்து விடும் என்பதற்கு சாட்சியாக தென்காசி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

தென்காசயில் உள்ள குலசேகரன் பட்டிணம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி காளியம்மாள். தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்க தாங்கள் சம்பாதித்த பணத்தில் ஒரு வீடு கட்டலாம் என ஆசைப்பட்டுள்ளன்ர். ஜோதிடத்தின் மீது நம்பிக்கையுள்ள அவர்கள் ஜோதிடரை சந்தித்து ஆலோசனைக் கேட்க முடிவு செய்துள்ளனர். இது சம்மந்தமாக தென்காசியில் உள்ள ஒரு பிரபல ஜோதிடரை சந்தித்துள்ளார் மாரியப்பன்.

அப்போது  இருவரின் ஜாதகத்தை வைத்து ஜோதிடர் மாரியப்பனிடம் ‘உன் மனைவியின் நடத்தை தவறாக உள்ளது’ என ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார். ஜோதிடரின் வார்த்தையை நம்பிய மாரியப்பன்,  இத்தனை வருடம் தன்னுடன் வாழ்ந்த மனைவியை நம்பாமல் கோபத்தோடு ஊருக்கு சென்றுள்ளார்.

தங்கள் பருத்தி வயலில் வேலை செய்து கொண்டிருந்த மனைவி காளியம்மாளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர் தான் அவருக்கு தான் செய்த கொடூரம் புரிந்துள்ளது. அதனால் குற்றவுணர்ச்சிக்கு ஆளான அவர் அங்கிருந்து வீட்டுக்கு வந்து தானும் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.