6 ஆண்டுகளுக்குப் பின் ஆட்டநாயகன் விருது!! தோனி சொன்ன ஒற்றை வார்த்தை!!

Photo of author

By Gayathri

6 ஆண்டுகளுக்குப் பின் ஆட்டநாயகன் விருது!! தோனி சொன்ன ஒற்றை வார்த்தை!!

Gayathri

Man of the Match award after 6 years!! Dhoni's single word!!

IPL 2025 : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உடைய வெற்றியை ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்த நிலையில் நேற்று இரவு ஏழு முப்பது மணிக்கு லக்னோவில் 30 ஆவது லீக் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட் VS சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதிய நிலையில், இந்த முறையாவது சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெறுமா என்பது போல அந்த அணியின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். CSK அணியின் வெற்றிக்காக கேப்டன் தோனி அவர்கள் சில முக்கிய மாற்றங்களை மேற்கொண்டிருந்த நிலையில் TOSS வென்றது CSK அணி.

பவுலிங் தேர்வு செய்த தோனி LSG அணிக்கு பேட்டிங் வழங்கினார். முதலில் பேட்டிங் இறங்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய CSK அணி தொடக்கத்தில் அதிவேகமாக ரன்களை குவித்து வந்த நிலையில், மிடில் ஆடலில் ஆட்டத்தை இழக்க தொடங்கியது. அதனை தொடர்ந்து களம் இறங்கிய எம்எஸ் தோனி அவர்கள் 11 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்டு மொத்தமாக 26 ரன்கள் எடுத்திருந்தார். இதோடு மட்டுமல்லாது ஆயுஷ் பட்டோனியை ஸ்டம்பிங் செய்த தன்னுடைய 200 ஆவது ஆட்டமிழப்பை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காகத்தான் 6 ஆண்டுகளுக்குப் பிறகு எம் எஸ் தோனி அவர்கள் ஆட்டநாயகன் விருதை பெற்றார். ஆனால் இறுதி பெற்றவுடன் ஆட்டநாயகன் விருதை, ” அவங்க எனக்கு ஏன் விருந்து கொடுக்குறாங்கன்னு தெரியல ? நூர் அகமத் ரொம்பவே நல்லா வந்து சேர்ந்தார். அவருக்கு கொடுத்திருக்கலாம் ” தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய ஐபிஎல் தொடரில் ஆட்டநாயகன் விருதை வென்ற தோனி அவர்கள் 43 வயதில் ஆட்டநாயகன் விருது வென்ற அதாவது மிக வயதான வீரர் எம் எஸ் தோனி என்ற இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.