திமிங்கலத்தின் வாய்க்குள் போய் வாழ முடியுமென எத்தனையோ கதைகளையும் நாம் கேட்டிருப்போம். ஆனால் இந்த சம்பவம் உண்மையாகவே அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மெசச்சுசஸ்ட் கடற்கரையில்தான் இந்த அதிர்ச்சியான மற்றும் விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் இணையதளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.
நாம் சின்னவயதில் கதை ஒன்று படித்து இருப்போம். அதில் திமிங்கிலத்தின் வாய்க்குள் போய் மீண்டும் உயிருடன் தப்பி வந்த கதையை படித்து இருப்போம். அதே கதை தான் உண்மையாக நடந்து உள்ளது.
மைக்கேல் பக்காடு என்ற ஒரு மீனவர் கடலில் உள்ள லாப்ஸ்டர் அதாவது பெரிய வகை இறால் லாப்ஸ்டர்களை பிடிப்பதற்காக கடலுக்குள் சென்று உள்ளார். 35 அடி ஆழத்திற்கு சென்று லாப்ஸ்டரை தேடிக்கொண்டிருந்த மைக்கேலை ஹம்பக் என்ற வகை கொண்ட திமிங்கலம் எதிர்பாராத விதமாக மைக்கேலை முழுங்கி உள்ளது.
சுமார் 30 வினாடி உள்ளே என்ன செய்வது என்று தவித்து கொண்டிருந்தாராம் மைக்கேல். திமிங்கிலம் உடனே என்ன நினைத்ததோ தெரியவில்லை நீர்ப்பரப்பின் மேலே வந்து அவரை காரித்துப்பி விட்டது.
துப்பிய வேகத்தில் நீரின் மேற்பரப்பில் வந்த மைக்கேல் கொஞ்சம் கொஞ்சமாக கரைக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு எவ்விதமான எலும்பு முறிவு அல்லது பலத்த காயங்கள் ஏற்பட வில்லை. சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இப்பொழுது அவர் நலமுடனும் இருக்கிறார்.
இதுகுறித்து மெசச்சுசஸ்ட் திமிங்கிலம் நிபுணர்கள் கூறியது, திமிங்கலம் எப்பொழுதுமே வாயைத் திறந்துகொண்டு நேர்வாக்கில் வரும், கூட்டம் கூட்டமாக உள்ள சிறிய மீன்களை லபக் என்று முழங்குவதற்காக அது நேர்கோட்டில் வரும் பொழுதுதான் மைக்கேல் சிக்கி இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். அவர் இன்னும் உயிர் வாழ வேண்டுமென்று நினைத்ததோ என தெரியவில்லை திமிங்கலம் அவரை காரித்துப்பி விட்டது.
இதுகுறித்து மைக்கேல் கூறியதாவது, நான் திடீரென்று ஒரு பெரிய திண்ணையின் மேல் இருப்பதாக உணர்ந்தேன். அது முற்றிலும் கருப்பு பகுதி என்று எனக்கு தெரியும். நான் நகர்கிறேன் என்று என்னால் உணரமுடிந்தது. திமிங்கலம் அதன் வாயில் உள்ள தசைகளுடன் அழுத்துவதை என்னால் உணர முடிந்தது. நான் அப்பொழுது சூரிய ஒளியை கண்டேன். அந்த திமிங்கலம் தலையை பக்கவாட்டாக வீச தொடங்கியது. அடுத்த நிமிஷம் நான் தண்ணீரில் இருப்பதை அறிந்தேன் என்று மைக்கேல் பேகர்ட் கூறினார்.30 – 40 வினாடிகள் உள்ளே இருந்து இருப்பேன் என்று அவர் கூறினார்.
இச்செய்தி சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.