நடிகர் சிம்புவின் திரைப்படம் யூடியுபில் புதிய சாதனை.!!

Photo of author

By Vijay

நடிகர் சிம்புவின் திரைப்படம் யூடியுபில் புதிய சாதனை.!!

Vijay

Updated on:

நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது

நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த திரைப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், அஞ்சனா கீர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மாநாடு படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர், முதல் பாடல் மற்றும் டீஸர் வெளியாகி சிம்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியான மாநாடு திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.