ஐயப்பன் கோவிலில் நாளை மண்டல பூஜை!!

Photo of author

By Vinoth

கேரளா: வருடதோரும் கார்த்திகை 1 முதல் 41 நாட்கள் மண்டல பூஜை காலம் அனுசரிக்கப்படுகிறது. 41-வது நாள் மண்டல பூஜை நடக்கிறது. இந்த ஆண்டு மண்டல பூஜை நவம்பர் 16-ல் தொடங்கியது. அதற்கு முதல் நாள் மாலை சபரிமலை ஐயப்பன் சன்னிதானம்  நடை திறக்கப்பட்டது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி ஏந்தி பம்பை வழியாகவும் புல்மேடு, எரிமேலி வழியாகவும் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர்.

கடந்த ஆண்டு போல் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் செய்து திருப்புகின்றனர். இருப்பினும் கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு நாளைக்கு  92,000 பக்தர்கள் வரை தரிசனம் செய்கின்றனர். இதனால் சில மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சரகுத்தியில் இருந்து பக்தர்கள் கட்டம் கட்டமாக அனுப்பப்பட்டனர். அதனை தொடர்ந்து நாளை மண்டல பூஜை நடக்கிறது.

நாளை அதிகாலை 3:30 மணிக்கு தொடங்கும் நெய்யபிஷேகம் காலை 11 மணியுடன் முடியும். மதியம் 12 மணிக்கு தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நடக்கும். இதற்காக இன்று 50 ஆயிரம் பக்தர்கள் மற்றும் நாளை 60 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிகபடுவார்கள். இதன் காரணமாக இன்று மதியம் பம்பையில் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படமாட்டது.  அதன் பிறகு நடை அடைக்கப்படும் மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.