உணவு இடைவெளியில் கட்டாயம் உடலுறவு.. அரசு போட்ட அதிரடி உத்தரவு!!

0
627
Want to have long sex? So use onion like this!!
Want to have long sex? So use onion like this!!

 

 

ரஷ்யா நாட்டில் வாழ்ந்து வரும் மக்கள் அனைவரும் எப்பொழுதும் வேலை பின்னால் சென்று கொண்டிருக்கக் கூடாது. உணவு இடைவெளியில் உடலுறவு கொள்ள வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் அவர்கள் அறிவித்துள்ளார்.

உலகில் மக்கள் தொகை பெருக்கம் ஒரு பிரச்சனையாக பார்க்கப்படும் நிலையில் மக்கள் தொகை சரிவும் பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகின்றது. ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் தொடர்ந்து மக்கள் தொகை குறைந்து கொண்டே செல்வது போல ரஷ்யாவிலும் மக்கள் தொகை குறைந்து கொண்டே இருக்கின்றது.

அவ்வாறு மக்கள் தொகை குறைந்து வருவதால் ரஷ்யாவில் பெரும் பிரச்சனை ஏற்பட தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது. ரஷ்யாவில் பல ஆண்டுகளாகவே மக்கள் தொகை குறைந்து வரும் நிலையில் இடையில் கொரோனா பாதிப்பும் ரஷ்யாவில் மக்கள் தொகையை வெகுவாக குறைத்து விட்டு சென்றுவிட்டது. இது வரும் காலங்களில் மிகப் பெரிய பிரச்சனையாக வெடிக்கத் தொடங்கும் என்பதால் மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரஷ்ய அதிபர் புதின் ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளார்.

முன்பு கூறியதைப் போல ரஷ்ய அதிபர் புதின் அவர்கள் மக்கள் அனைவரும் வேலைக்கு சென்ற பின்னர் வேலை செய்வதற்கு இடையில் கிடைக்கும் உணவு இடைவெளி, காபி இடைவெளி ஆகிய நேரங்களில் உடலுறவு கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து ரஷ்ய நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் யெவ்ஜெனி ஷெஸ்டோபலோவ் அவர்கள் “நாட்டில் தற்பொழுது மக்கள் தொகை குறைந்து வருகின்றது. இது மிகப் பெரிய பிரச்சனைக்கு காரணமாக அமையும். எனவே மக்கள் தொகையை அதிகரிக்கச் செய்வது முக்கியமானதாகும். எனவே மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் மக்கள் அனைவரும் குடும்பத்தை விரிவாக்கம் செய்ய வேலையில் இருக்கும் மதிய உணவு இடைவேளை மற்றும் காபி இடைவேளையில் உடலுறவு செய்து கொள்ளலாம்.

வேலையில் ரொம்ப பிசியாக இருப்பதால் குழந்தை பிறப்பை தள்ளிப் போடலாம்  என்று நீங்கள் சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. வேலை செய்யும் பொழுது கிடைக்கும் இடைவேளை நேரத்தை நீங்கள் குழந்தை பிறப்புக்கு பயன்படுத்தலாம். வாழ்க்கை என்பது மிக மிக விரைவாக சென்று கொண்டிருக்கின்றது என்பது உங்களுக்கே தெரியும். எனவே வாய்ப்பு கிடைக்கும் பொழுதும் நேரம் கிடைக்கும் பொழுதும் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இடைவேளை நேரத்தை பயன்படுத்தி குழந்தையை உருவாக்க முயற்சி செய்யுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

ரஷ்யா நாட்டில் தற்பொழுது குழந்தை பிறப்பு விகிதம் சரிந்துள்ளது. அதாவது குழந்தை பிறப்பு விகிதம் 2.1 ஆக இருக்க வேண்டும். ஆனால் கருத்தரிப்பு விகிதமே 1.5 ஆகத் தான் இருக்கின்றது. இவ்வாறு குழந்தை பிறப்பு விகிதமே குறைந்து கொண்டிருக்க இதற்கு மத்தியில் ரஷ்யா உக்ரைன் பேர் வேற இருக்கின்றது. இந்த போரால் மேலும் பல லட்சம் மக்கள் ரஷ்யா நாட்டில் உயிரிழப்பார்கள் என்னும் அச்சத்தில் ரஷ்யா இருக்கின்றது. இந்நிலையில் குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் ரஷ்யா அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் குழந்தை பிறப்பை அதிகரிக்கும் விதமாகவும் மக்கள் தொகையை அதிகரிக்கும் விதமாகவும் ரஷ்ய அரசு 18 முதல் 40 வயது வரை உள்ள பெண்களுக்கு பல இலவச சிகிச்சைகளை வழங்கி வருகின்றது. மேலும் மக்கள் தொகையை அதிகரிக்கும் விதமாக பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ரஷ்யாவில் ஒரு பகுதியில் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

24 வயதான பெண்களுக்கு முதல் குழந்தை பிறந்தவுடன் அவர்களுக்கு 1.04 லட்சம் ரூபிள் அதாவது இந்திய மதிப்பில் 9 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப் போலவே கருகலைப்பு செய்வதும் கடினமாக்கப்பட்டுள்ள நிலையில் விவாகரத்து கட்டணமும் உயர்த்தப்பட்டு இருக்கின்றது.

ரஷ்யா நாட்டில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குழந்தை பிறப்பு விகிதம் சரிந்துள்ளது. கடந்த ஜூன் வரை 599600 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளது. முந்தைய ஆண்டை விட 16000 குறைவு என்பதால் இது பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று ரஷ்யா நாட்டு அமைச்சர்கள் எச்சரிக்கின்றனர்.

Previous articleKaruppu kavuni rice benefits in tamil : கருப்பு கவுனி அரிசி நன்மைகள்!
Next articleகதற கதற செஞ்சாரு.. காவல் நிலையத்தில் இளம் பெண் குமுறல்!! “ரஞ்சிதமே”நடன இயக்குனர் தலைமறைவு!!