20 வருடங்களுக்கு பின் மீண்டும் வந்துள்ள மங்கிபாஸ் வைரஸ் தொற்று!! தகவல் வெளியிட்ட நோய் தடுப்பு மையம்!!

Photo of author

By Jayachithra

20 வருடங்களுக்கு பின் மீண்டும் வந்துள்ள மங்கிபாஸ் வைரஸ் தொற்று!! தகவல் வெளியிட்ட நோய் தடுப்பு மையம்!!

Jayachithra

Updated on:

உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா வைரஸ் தொற்றானது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஒரு கொரோனா இரண்டாவது அலை தாக்கமானது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. தற்போது, பல நாடுகளில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்று 111நாடுகளில் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக பல நோயாளிகள் இழந்து உள்ளனர். லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இதனை தொடர்ந்து 3 வைத்து அலை நாடுகளில் தொடருமா? என்ற கேள்வி மக்களுக்குள் எழுந்து வருகிறது. தற்போது அரிய வகை வைரஸ் தொற்று அமெரிக்காவில் நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவருக்கு ஏற்பட்டு உள்ளதாக அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் உறுதி செய்து உள்ளது.

அமெரிக்க நாட்டில், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நைஜீரியா என்னும் நாட்டை சேர்ந்த ஒருவர் வசித்து வருகிறார். இவர் லாகோஸ் நகரில் இருந்து நைஜீரியா மற்றும் டல்லாஸ் போன்ற இடங்களுக்கு பயணம் செய்து வந்து உள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு பரிசோதனை செய்ததில் மங்கிபாஸ் வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த நோய் தொற்று குறித்து அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றொரு செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் இவர் டல்லாஸ் நகர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த நோயானது காய்ச்சலை உண்டாக்கி சிறிய கட்டிகள் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் என்று வெளியிட்டுள்ளது. பின் இந்த நோய் உடல் முழுவதும் பரவி 2 முதல் 4 வாரங்களுக்கு நீடிக்கும் என்றும் இது பெரியம்மை நோய் உடன் தொடர்பு கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

இது மிக அரிதானது என்றாலும் கூட தீவிர தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இவருடன் பயணம் செய்தவர்களை சுகாதார அதிகாரிகள் தொடர்பு கொண்டு வருவதாக கூறி உள்ளனர். மேலும் இதையடுத்து இந்த வைரஸ் தொற்றானது 20 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்காவில் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இதனைத் தொடர்ந்து இவர் ஒருவருக்கு மட்டும்தான் மங்கிபாரஸ் வைரஸ் உள்ளதா? அல்லது இவர்கள் பயணம் செய்தவர்கள் இவர் இருந்த இடத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் இது பரவிக்கொண்டிருக்கிறதா? என்ற குழப்பத்தில் உள்ளனர். அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்ட பின்னே இதற்கான தீர்வு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.