காற்று மாசுபாடு,கெமிக்கல் அழகு சாதனப் பொருட்கள்,ஆரோக்கியமற்ற உணவுமுறை போன்ற காரணங்களால் சருமம் பல பாதிப்புகளை சந்திக்கிறது.இளம் வயதில் சரும சுருக்கம்,தேமல்,மங்கு,தோல் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகளால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.
இதுபோன்ற சரும பிரச்சனைகளை வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம்.
தீர்வு 01:
*குப்பைமேனி – ஒரு கையளவு
*வேப்பிலை – ஒரு கையளவு
*மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
முதலில் பாத்திரம் ஒன்றை எடுத்து ஒரு கைப்பிடி வேப்பிலை மற்றும் குப்பைமேனி இலை போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அலசி எடுக்கவும்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு மைய்ய அரைத்து எடுக்கவும்.இந்த விழுதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து சருமத்தில் பூசி குளித்து வந்தால் தோல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.
தீர்வு 02:
*அகத்தி கீரை – ஒரு கப்
*மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
முதலில் ஒரு கப் சீமை அகத்தி இலையை எடுத்து தண்ணீர் ஊற்றி நன்றாக அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு மஞ்சள் சேர்த்து விழுதாக அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால் சரும நோய்கள் அனைத்தும் விரைவில் குணமாகும்.
தீர்வு 03:
*துளசி – ஒரு கப்
*பூண்டு பல் – இரண்டு
முதலில் ஒரு கப் துளசி இலையை பாத்திரத்தில் போட்டு அலசி மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளவும்.
அடுத்து அதில் இரண்டு பல் வெள்ளை பூண்டை போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து தேமல்,மங்கு,தோல் அரிப்பு போன்ற பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவுவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தோல் வியாதிகள் அனைத்தும் குணமாகும்.