சாராய மாடல் ஆட்சிக்கு முற்றிலும் ஜால்ரா போடும் தோழமை கட்சிகள்- திருமா-வுடன் இணைந்த மநீம கமல்!!  

0
393
Manima Kamal who joins with the friendly parties- Thiruma- is completely jalra to Saraya model regime!!
Manima Kamal who joins with the friendly parties- Thiruma- is completely jalra to Saraya model regime!!

சாராய மாடல் ஆட்சிக்கு முற்றிலும் ஜால்ரா போடும் தோழமை கட்சிகள்- திருமா-வுடன் இணைந்த மநீம கமல்!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா ஆளும் கட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளார்.இவர் தனது சாதி ரீதியாக பல குற்றங்கள் நடந்த போதிலும் பெரும் வாரியாக இவரது குரல் மேலோங்கவில்லை.குறிப்பாக வேங்கைவையல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சர்ச்சையானது பல இடங்களில் வெடிக்க தொடங்கியது.ஆனால் ஓராண்டுகள் ஆகியும் ஆளும் கட்சி நடவடிக்கை எடுக்காதது குறித்து பலர் தற்பொழுது வரை கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இவரோ எத்தனை ஆண்டுகள் ஆனது என்பது முக்கியமில்லை நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதுதான் முக்கியம் என்று வசனம் பேசி கூட்டணி கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்.

அதேபோல கள்ளக்குறிச்சி விவகாரத்திலும் மௌனம் காத்து வந்த திருமா பல விமர்சனங்களுக்குப் பிறகு தனது எதிர்ப்பை தெரிவித்தார்.இது தனது கூட்டணி கட்சிக்கு இடையூறு ஏற்படாத வகையில் இருப்பதாகவும் தற்பொழுது வரை பலர் கூறி வருகின்றனர்.அவர் பாணியிலேயே தற்பொழுது கமல்ஹாசன் அவர்களும் இருப்பதாக கூறுகின்றனர்.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து நேரடியாக ஆய்வு செய்த கமல் செய்தியாளர்கள் சந்திப்பில், யாரும் குடிக்க கூடாது என்று சொல்ல முடியாது அளவாக குடிக்க ஆலோசனை சொல்லலாம் என்று தெரிவித்திருந்தார்.

ஓர் கட்சி தலைவரின் இம்மாதிரியான பேச்சானது மக்கள் மத்தியில் முற்றிலும் எதிர்ப்பைத்தான் தெரிவிக்கும்.பூரண மதுவிலக்கு வேண்டுமென்று பலர் போராடிவரும் நிலையில் கமல்ஹாசனின் இவ்வாறான பொறுப்பற்ற பேச்சு பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.அதேபோல இத்தனை உயிர்களை கள்ளச்சாராயம் என்ற ஓர் போதை மூலம் பறித்த பொழுதும் மீண்டும் அதனை குடிக்க ஆலோசனை செய்வது எந்த விதத்தில் சரியானது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க கூட்டணி கட்சி என்றாலும் விடுதலை சிறுத்தை தலைவரை  எப்பொழுதும் திமுக ஒரு அடி தள்ளி வைத்து தான் பார்த்து வருகிறது.அதேபோல மக்கள் நீதி மய்யத்தையும் பார்ப்பதாக பலரும் கூறுகின்றனர்.அந்த வகையில் சமீப காலமாக திருமாவின் செயல்களைப் போலவே கமல்ஹாசனின் நடத்தைகள் அனைத்தும் உள்ளது.அதற்கு எடுத்துக்காட்டாக இந்த கள்ளக்குறிச்சி மதுபானம் அருந்துதல் குறித்து பேசியது குறிப்பிடத்தகது.தோழமைக் கட்சி என திமுக-வை  திருமா எப்படி காட்டமாக எதிர்கொள்ளாமல் உள்ளாரோ அதன் வழியவே கமல்ஹாசனும் கடைப்பிடித்து வருகிறார்.

Previous articleபாமக ஓட்டுக்களை திருட அப்பா மகன் போட்ட பலே திட்டம்!! வன்னியர் இட ஒதுக்கீட்டில் கபட நாடகமாடும் திமுக!!
Next articleஇனி வாகனம் திருட்டுப்போனால் 10 நிமிடத்தில் கண்டுபிடித்துவிடலாம்!! சென்னை போலீஸீன் அசத்தல் நடவடிக்கை!!