பாரதிக்கண்ணம்மா சீரியலில் மணிமேகலையா.? வெண்பா கதாப்பாத்திரத்தை ரீப்லேஸ் செய்யும் கோமாளி நடிகை!!

Photo of author

By Jayachithra

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மெகாதொடர் பாரதி கண்ணம்மா இது மிகுதியான பார்வையாளர்களை கொண்டது. இதில் முக்கியமான கதாபாத்திரமான வில்லியாக வெண்பா கேரக்டரில் நடித்து வருகிறார் ஃபரினா. இவர் முதலில் சமையல் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்து சின்னத்திரை பயணத்தை பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் அடி எடுத்து வைத்தார்.

தனது அபரிதமான நடிப்பு திறமையால் மக்கள் மத்தியில் சிறந்த வில்லியாக இருக்கிறார். இந்த தொடரின் இமாலய வெற்றிக்கு ஃபரினாவும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. தற்போது ஃபரீனா நிறைமாத கர்ப்பிணியாக தனது பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

இதனால், அந்த சீரியலில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், இவரது கதாபாத்திரத்தில் நடிக்க குக் வித் கோமாளி மூலம் புகழ் பெற்ற மணிமேகலை நடிக்கப்போகிறார் என்ற தகவல்கள் தற்போது இணையத்தில் வலம் வருகின்றன.

மணிமேகலை ஒத்துபோவாரா என்பதை காலம் தான் உணர்த்தும்.
இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் சீரியல் நிர்வாகத்தினரிடம் இருந்து வரவில்லை. இந்த செய்தி சீரியல் பார்வையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.