மணிப்பூர் பயங்கரம்! கலவரக்காரர்களை சுட ஆளுநர் அதிரடி உத்தரவு

Photo of author

By Parthipan K

மணிப்பூர் பயங்கரம் ! கலவரக்காரர்களை சுட ஆளுநர் அதிரடி உத்தரவு!

மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஷ்  சமூகத்தினர் பழங்குடியின பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி அனைத்து பழங்குடியின மாணவ அமைப்பின் சார்பில் ஒற்றுமை ஊர்வலம் நடந்தது. இதற்கு பழங்குடியின மக்கள் பயங்கர எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலானது வன்முறையாக வெடித்துள்ளது.

இந்த ஊர்வலம் டோர்பாங் பகுதிக்கு வந்த போது இருதரப்புக்கும் இடையே வன்முறை ஏற்பட்டதில் ஏராளமான வாகனங்கள் மற்றும் வீடுகள் தீ வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்தியுள்ள 8 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது, மேலும் மணிப்பூர் மாநிலத்தில் 5 நாட்களுக்கு இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் இருதரப்புக்கும் இடையே ஏற்ப்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 4,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் கலவரங்களை கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படைகள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். மேலும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் கலவரகாரர்களை கண்டதும் சுட அம்மாநில ஆளுநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் நிலைமையை கட்டுப்படுத்த கூடுதல் ராணுவத்தை மத்திய அரசு மணிப்பூர் மாநிலத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. கலவரம் காரணமாக அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.