உலக நாடுகளை பாதித்த மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வீடியோ!! கடுமையான கண்டனம் தெரிவித்த  வல்லரசு நாடு!! 

0
60
Manipur rape video that affected the world!! A superpower strongly condemned!!
Manipur rape video that affected the world!! A superpower strongly condemned!!

உலக நாடுகளை பாதித்த மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வீடியோ!! கடுமையான கண்டனம் தெரிவித்த  வல்லரசு நாடு!! 

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கொடூரமான பாலியல் வன்கொடுமை வீடியோ உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த நிகழ்விற்கு அமெரிக்க நாடு கடுமையான கண்டனம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குக்கி என்ற இரு சமூகத்தினருக்கு இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக வன்முறை ஏற்பட்டது. இது பயங்கரமாக பரவி கலவரமாக வெடித்து பல வீடுகள்,பள்ளிகள்,என பல கட்டிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்ட்டன.

இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்ட மக்கள் அநியாயமாக உயிரை இழந்தனர். மேலும் அடுத்து நிகழ்ந்த கொடூர நிகழ்வு உலகையே உலுக்கியது. மணிப்பூரின் ஒரு ஊரில் பழங்குடியின சமூக பெண்கள் இருவரை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி சாலைகளில் இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இதுபற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை குற்றவாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த மணிப்பூர் சம்பவம் இந்தியாவை மட்டுமல்ல உலக நாடுகளையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியதாவது:-
மணிப்பூரில் பெண்களுக்கு நடத்தப்பட்ட வன்முறை மிருகத்தனம் வாய்ந்தது. பயங்கரமானது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அமெரிக்கா தனது அனுதாபங்களை தெரிவிக்கிறது.

மணிப்பூரில் நடைபெற்ற வன்முறைக்கு அமெரிக்கா அமைதியான தீர்வை விரும்புகிறது. அனைத்து குழுக்கள், வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் மனிதாபிமான தேவைகளுக்கு பதிலளிக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்துகிறது என அவர் தெரிவித்தார்.