போலி வீடியோ வெளியிட்ட விவகாரம்! வழக்குகளை ரத்து செய்ய கோரிய மனுவை விசாரிக்க யூடியூபர் தரப்பு மேல் முறையீடு
வட மாநில புலம்பெயர்ந்த் தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனுவை விரைந்து விசாரிக்க கோரி யூடியூபர் மணிஷ் காஷ்யப் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யூடியூபர் மணிஷ் காஷ்யபின் மனுவை இன்றே விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி விடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய பீகாரை சேர்ந்த யூடியூபர் மணிஷ் காஷ்யப்பை தமிழக போலீசார் அவரை பீகாரில் வைத்து கைது செய்து தமிழகத்துக்கு கொண்டு வந்தது.
இதனிடையே, தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், தனக்கு எதிரான வழக்குகளை இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கவும், முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை தனக்கு தெரிவிக்கவும் கோரி யூடியூபர் மணிஷ் காஷ்யப் உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் முறையிடப்பட்டது.இந்த முறையீட்டை பரிசீலித்த உச்சநீதிமன்றம் இன்றைய விசாரணையின் இறுதியில் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தது.