92 வயதில் இறைவனடி சேர்ந்தார் மன்மோகன் சிங்!! இறப்பிற்கான காரணம் குறித்து மருத்துவமனை அறிக்கை!!

0
69
Manmohan Singh joined the Lord at the age of 92!! Hospital report on cause of death!!
Manmohan Singh joined the Lord at the age of 92!! Hospital report on cause of death!!

இந்தியாவினுடைய முன்னாள் பிரதமர் ஆன மன்மோகன்சிங் அவர்கள் தன்னுடைய 92 வது வயதில் உடல் நல குறைவினால் உயிரிழந்திருக்கிறார். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மன்மோகன் சிங் அவர்கள் சிகிச்சை பலர் இன்றி உயிரிழந்ததாகவும் மேலும், இது சம்பந்தப்பட்ட அதிகாரபூர்வமான அறிக்கையையும் மருத்துவமனை வெளியிட்டுயிருக்கிறது.

இவர் 2004 முதல் 2014 வரை 13-ஆவது இந்தியப் பிரதமராக பணியாற்றினார். சவகர்லால் நேரு, இந்திரா காந்தி, நரேந்திர மோதிக்கு பிறகு நீண்ட நாட்களுக்கு பிரதமராகப் பதவியில் இருந்தவர். இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரான மன்மோகன் சிங், இந்தியாவின் முதல் சீக்கியப் பிரதமரும் ஆவார். சவஹர்லால் நேருக்குப் பிறகு முழு ஐந்தாண்டு பதவிக் காலத்தை முடித்த பிறகு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமரும் என்று பெருமையும் இவரே பெற்று இருக்கிறார்.

1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதியில் பஞ்சாப் மாநிலத்தில் மன்மோகன் சிங் பிறந்திருக்கிறார். அங்கேயே வளர்ந்தவர் 1954 ஆம் ஆண்டில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அதன் பின்னர் மேல் படிப்பிற்காக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் வணிகவியல் சார்ந்த படிப்புகளை தேடிப் படிக்க தொடங்கி இருக்கிறார்.

இவ்வாறு படிப்பில் சிறந்து விளங்கியவர், பஞ்சாபி யூனிவர்சிட்டியிலும் டெல்லி ஸ்கூப் ஆப் காமர்ஷிலும் மன்மோகன் சிங் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இதனை தொடர்ந்து 1970 இல் அரசின் வணிகவியல் துறைக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தன்னுடைய வாழ்வில் அடுத்தடுத்த நிலைகளில் முன்னேற்றத்தை கண்ட அவர் 1998ல் நிதி அமைச்சராக பொறுப்பேற்கிறார். அதன் பின் 2004 எதிர்க்கட்சித் தலைவராகவும் அதில் தொடர்ந்து இரண்டு முறை பாரத பிரதமர் ஆகவும் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

92 வயதான மன்மோகன் சிங் அவர்கள் நேற்று இரவு உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருந்த நிலையில், அங்கே சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இறைவனடி சேர்ந்தது.

எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-

வயது மூப்பின் காரணமாக அவருடைய இல்லத்தில் இருந்து திடீரென சுயநினைவு இழந்தார் எனக்கூறி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். எவ்வளவு முயன்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இவருக்கு வீட்டில் சரியாக 8.06 மணிக்கு முதலுதவி செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையிலும் அவருக்கான மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அவர் 9.51 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார் என மிகவும் சோகத்துடன் தெரிவித்து இருக்கின்றனர்.

Previous articleஷேவ் செய்யாமல் கை கால் முடிகளை ரீமூவ் பண்ணனுமா? அப்போ கற்றாழை வேக்ஸ் ட்ரை பண்ணுங்க!!
Next articleநடிகர் சூர்யாவின் மறைக்கப்பட்ட உண்மை!! விபத்தில் சிக்கிய கார்த்தி!!