மாண்டாஸ் புயல்.. மின் துண்டிப்பு! சென்னைவாசிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட தகவல்!
மாண்டஸ் புயல் காரணமாக அதிக கன மழை பெய்யக்கூடும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது எடுக்கப்பட்ட நிலையில் மின் துண்டிப்பு மற்றும் போக்குவரத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தினர்.
அந்த வகையில் நேற்று இரவு மான்டஸ் புயல் ஆனது கரையை கடந்த நிலையில் தற்போது வரை மிதமான மழை காணப்படுகிறது. நேற்று புயல் காரணமாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மக்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு மின்விநியோகத்தை நிறுத்தம் செய்யப்பட்டது.
மின் வினியோகம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட பகுதிகளில் மீண்டும் மின்விநியோகம் வழங்கப்படும் என்றும் மதியத்திற்குள் அதற்கான பணிகள் முடிவடையும் எனவும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதனை அடுத்து போக்குவரத்து துறை ஓர் அறிவிப்பு போன்ற வெளியிட்டுள்ளது.அதில், புயல் காரணமாக சில முக்கிய இடங்களில் போக்குவரத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி இருந்ததையடுத்து இன்று முதல் அனைத்து இடங்களிலும் வழக்கம் போல் போக்குவரத்து நடைமுறையில் இருக்கும்.
அது மட்டும் இன்றி மாண்டஸ் புயல் காரணமாக கிட்டத்தட்ட 73 மரங்கள் சாலைகளில் விழுந்துள்ள நிலையில் 72 மரங்கள் தற்பொழுது வரை அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு வேறு எந்தெந்த இடங்களில் மரங்கள், புயலால் கீழே விழுந்துள்ளது என கண்டறிந்து அப்புறப்படுத்த மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மீண்டும் நடைமுறையில் இருந்தது போல் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.