என் நிறத்தை வைத்து பலர் என்னை அவமானப்படுத்தினார்… – பேட்டியில் குமுறிய நடிகர் முரளி…!

0
128
#image_title

என் நிறத்தை வைத்து பலர் என்னை அவமானப்படுத்தினார்… – பேட்டியில் குமுறிய நடிகர் முரளி…!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர்முரளி. இவர் ரசிகர்களால் மறக்க முடியாத நடிகர் ஆவார். இவர் சினிமாவின் தனித்துவமான ஒரு நாயகன். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர்.

1984ம் ஆண்டு தமிழில் வெளியான ‘பூ விலங்கு’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, அதர்மம், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, சொன்னால்தான் காதலா, இரணியன், சுந்தரா டிராவல்ஸ் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார்.

‘கடல் பூக்கள்’ என்ற படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.

நடிகர் முரளி 2010ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி தனது 47 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா, ஆகாஷ் என இரு மகன்களும் உள்ளனர்.

நடிகர் முரளி ஒரு பேட்டியில் பேசும்போது, சினிமாவின் ஆரம்பக் காலத்தில் எப்படிப்பட்ட அவமானங்களையும் அவர் சுமந்தார் என்பது குறித்து பேசினாராம்.

அந்த பேட்டியில் அவர் பேசுகையில், நான் கருப்பான நிறம் என்பதால் என்னை பலரும் அசிங்கப்படுத்தினார்கள். படப்பிடிப்பின் போது கூட யாரும் என்னை கண்டுகொள்ள மாட்டார்கள். என் தந்தையிடமே சிலர் சொல்லியிருக்கிறார்கள் கருப்பா இருக்கும் முரளியெல்லாம் ஒரு ஹீரோவா என என் காதுபட பேசுவார்கள். படப்பிடிப்பின் போது கேரவன் கூட கொடுக்கமாட்டார்கள். அப்போது எல்லாம் அம்மாவிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதியிருக்கிறேன். ஆனால், தமிழ் மக்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள், அவர்களுக்கு என் நன்றிகள் மனம் திறந்து பேசினார்.

Previous articleதித்திக்கும் சுவையான பாதாம் அல்வா – செய்வது எப்படி?
Next articleஅந்த படத்தில் கவர்ச்சி நடனம் ஆடி வேதனைப் பட்ட தேவயானி – வெளியான தகவல்!