மாரியப்பன் தங்கவேலுக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்!

Photo of author

By Rupa

மாரியப்பன் தங்கவேலுக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்!

மாரியப்பன் தங்கவேலு மாற்றுத்திறனாளியான இவர் தின தடகள விளையாட்டில் புகழ் பெற்றவர். இவர் தமிழ் நாட்டிலுள்ள சேலம் மாவட்டத்தில் பெரியவடகம்பட்டி சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒலிம்பிக் போட்டியில் கலந்து தங்கப்பதக்கம் வெல்வதற்கு முன் பல தோல்விகளை கண்டுள்ளார். இவருக்கு ஐந்து வயது ஆகும் பொழுது பள்ளிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தால் தனது வலது கால் பகுதியை இழந்தார்.இவர் தனது காலை இழந்த நிலையிலும் விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் ஆகவே காணப்பட்டார்.

இவர் பயின்ற பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியர் ராஜேந்திரன் பரிந்துரைப்படி இவர் உயரம் தாண்டுதலில் பயிற்சி எடுத்து வந்தார். இவருக்கு 14 வயது ஆகும்போது நற்தேகம் உடையவர்கள் கலந்து கொள்ளும் போட்டியில் பங்கேற்றார். அதில் பங்கேற்று இரண்டாவது இடத்தை பெற்றார். தொடர்ந்து அவரது உழைப்பினால் 2013ஆம் ஆண்டு தேசிய மாற்றுத் திறனாளர் போட்டிகளில் கலந்துகொண்டார்.இந்த சத்தியநாராயண அவரது பயிற்சியில் மாரியப்பனை சேர்த்துக்கொண்டார்.2015 பெங்களூரில் உள்ள அவரது பயிற்சி மையத்தில் இணைத்துக்கொண்டார்.

அதனையடுத்து 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் துனிசியாவில் நடைபெற்ற ஐபிசி கிரான்பெரி போட்டியில் மாற்று திறனாளிகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்.அதனையடுத்து அவரது கடும் முயற்சியால் மாற்று திறனாளிகள் ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கத்தை பெற்றார்.அதனையடுத்து இவருக்கும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 75 லட்சம் ரூபாயை பரிசுத் தொகையாக வழங்கியது.மேலும் இந்தியா, தமிழ்நாடு என அனைத்து இடங்களில் உள்ளவர்களும் இவரை வாழ்த்தினர்.

மேலும் தமிழக அரசு இவர் தங்கப்பதக்கம் வென்றதற்கு ரூ 2 கோடியை பரிசுத்தொகையாக வழங்கியது.தற்பொழுது டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் தங்கவேலு கலந்து கொண்டு தங்கம் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.தற்பொழுது அவருக்கு அங்கு சென்ற மாரியப்பணுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்படுகிறது என கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி அவர் தற்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.பாரா ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்க உள்ளது.தொடக்க விழாவை மாரியப்பன் தங்கவேலு தொடக்கி வைப்பதாக தகவல்கள் வெளிவந்தது. தற்பொழுது அவர் விமானம் மூலம் வந்ததால் கரோனா தொற்று உறுதியாக இருப்பதாக கூறியுள்ளனர். மாரியப்பன் நலன் கருதி தற்போது தனிமைப்படுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தற்பொழுது அவருக்கு தொற்று உறுதியாகி நிலையில் போட்டியில் கலந்து தங்கம் வெல்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.