தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மாரிமுத்து என்பவரை கைது!

Photo of author

By Savitha

தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மாரிமுத்து என்பவரை கைது!

Savitha

தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மாரிமுத்து என்பவரை கைது!

தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மாரிமுத்து என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து பகுதி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் நூர்து பிரான்சிஸ் என்பவரை அவர் பணியில் இருக்கும்போதே அலுவலத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் இரண்டு பேர் சேர்ந்து வெட்டி கொலை செய்தனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே ராமசுப்பு என்பவரை போலீசார் கைது செய்திருந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான மாரி முத்து என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் குற்றவாளி மாரிமுத்துவை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் 4-தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

இன்னிலையில் தனிப்படை போலீசார் தூத்துக்குடி, நெல்லை பகுதிகளில் தீவிரமாக தேடி வந்த நிலையில் நெல்லை அருகே பதுங்கி இருந்ததாக குற்றவாளி மாரிமுத்துவை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.