மெரினா உலகத்தரம் வாய்ந்த வணிக மையம்!

Photo of author

By Savitha

மெரினா உலகத்தரம் வாய்ந்த வணிக மையம்!!

சென்னை மெரினாவில் உலகத்தரம் வாய்ந்த வணிக மையம் உட்பட இரண்டு முத்தியை திட்டங்கள் செயல்படுத்தி வருவதாக வீட்டு வசதி வாரிய கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள 25.16 ஏக்கர் நிலப்பரப்பில் உலகத்தரம் வாய்ந்த வணிகம், கடற்கரை சார்ந்த பொழுது போக்கு மற்றும் சுற்றுலா மையமாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைமை அலுவலகம் மற்றும் ஈ.வே.ரா கட்டிடம் அமைந்துள்ள இரு இடங்களில் அலுவலக மற்றும் வணிக வளாகங்களை பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் ஏற்படுத்திட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.