அக்னி சாட்சியாக நடைபெறுவது மட்டும் தான் திருமணம்.. மற்ற எதுவும் செல்லுபடியாகாது – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Photo of author

By Rupa

அக்னி சாட்சியாக நடைபெறுவது மட்டும் தான் திருமணம்.. மற்ற எதுவும் செல்லுபடியாகாது – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Rupa

Marriage is valid only if rules are followed- Supreme Court action order!!

அக்னி சாட்சியாக நடைபெறுவது மட்டும் தான் திருமணம்.. மற்ற எதுவும் செல்லுபடியாகாது – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

எந்த மதமாக இருந்தாலும் அதன் பாரம்பரியத்தை கடைப்பிடித்து நடைபெற்றால் மட்டும் தான் திருமணம் செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் திருமணச் சான்றிதழ் பெற வேண்டும் என்பதற்காக விழா நடத்தி மேற்கொண்டு சான்றிதழ் பெற்றுவிட்டு தற்பொழுது எங்களது திருமணம் செல்லாது என அறிவிக்குமாறு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். இது குறித்த வழக்கானது இன்று அமர்வுக்கு வந்தது. அதில், எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அதன் சடங்குகளை முறையாக கடைப்பிடித்து நடக்கப்படும் திருமணம்தான் செல்லுபடி ஆகும். அந்த வகையில் இந்து மத சடங்கான அக்னி சாட்சியாக திருமணம் நடைபெற்றால் மட்டுமே சட்டப்பிரிவு 5 யின் படி திருமணம் செல்லுபடியாகும் என கூறியுள்ளனர்.

இதற்கு மாறாக திருமணம் நடைபெற்றிருந்தால் சட்டப்பிரிவு 7யின் படி கட்டாயம் செல்லுபடி ஆகாது என்றும் கூறியுள்ளனர். ஒவ்வொரு மதத்திற்கும் ஒருவகையான சடங்கு இருக்கும். அதனை முறையாக கடைபிடித்து இருக்க வேண்டும், அந்த வகையில் இந்து மதப்படி அக்னிசாட்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இது அனைத்தும் இல்லாமல் ஒரு திருமணம் நடைபெற்றால் அது ஒரு திருமணமே இல்லை. சமூகத்தின் பார்வையில் திருமணம் என்பது இருவரின் மதிப்பை உயர்த்துவது தான்.

அதேபோல திருமணம் என்பது ஓர் புனிதமான ஒன்று இதனை மதித்து அதன் விதிமுறைகளின் கீழ் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு திருமணம் செய்பவர்கள் இது குறித்து கட்டாயம் கலந்தோசிக்காமல் எந்த ஒரு தவறான முடிவையும் எடுக்கக்கூடாது. திருமணம் என்பது ஓர் நிகழ்ச்சி போன்று தான் தற்பொழுது ஆகிவிட்டது. ஆனால் இரு மனங்களின் பந்தம் தான் திருமணம். மத சடங்குகளின் அடிப்படையில் ஒரு திருமணம் நடைபெற்றால் மட்டும்தான் செல்லுபடியாகும் இல்லையென்றால் அது திருமணம் என்று கூற முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.