இலங்கைப் பெண்ணுடன் திருமணமா? நடிகர் சிம்பு வெளியிட்ட புதிய தகவல்!
நடிகர் சிம்பு தனது திருமண பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். சிம்பு இலங்கை தொழில் அதிபர் ஒருவரின் மகளை மணமுடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
இலங்கை தொழிலதிபர் மகளுடன் திருமணம் குறித்த தனது மறுப்பை சிம்பு தரப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சிம்புவின் மேலாளர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவரை நடிகர் சிம்பு திருமணம் செய்ய உள்ளதாக சில செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். அதில் எந்தவித உண்மையுமில்லை.
திருமணம் போன்ற தனிப்பட்ட விஷயங்கள் குறித்த செய்திகளை வெளியிடும்போது ஊடகங்கள் தகவலை உறுதி செய்த பின்னர் வெளியிட வேண்டுகிறோம். அப்படி ஒருவேளை திருமணம் குறித்த தகவல் உறுதியானால் நாங்களே முதலில் உங்களிடம் சொல்வோம்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு ஏற்கனவே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மற்றும் நடிகை ஹன்சிகா மோத்வானியை காதலித்ததும் பின்னர் அது தோல்வியில் முடிவடைந்ததும் குறிப்பிடத்தக்கது.