மாசி மாதம்: உங்கள் ராசிக்கு இந்த மாதத்தில் என்னென்ன நடக்கும்..!

Photo of author

By Divya

மாசி மாதம்: உங்கள் ராசிக்கு இந்த மாதத்தில் என்னென்ன நடக்கும்..!

1)மேஷம்

மாசி மாதத்தில் திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெறும். திருமண தடை இருந்தால் அவை விலகி திருமணம் உறுதியாகும். இந்த மாதத்தில் எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும்.

2)ரிஷபம்

இந்த மாதம் தங்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும் மாதமாக இருக்கின்றது. தொழில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

3)மிதுனம்

இந்த மாதம் உங்களுக்கு மன வலிமை மற்றும் ஆற்றல் அதிகரிக்கும் மாதமாக இருக்கின்றது. இம்மாதத்தில் எடுத்த காரியங்களில் வெற்றி மட்டுமே சந்திப்பீர்கள்.

4)கடகம்

மாசி மாதத்தில் எந்த காரியத்தையும் தொடங்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் யோசித்து முடிவு எடுங்கள்.

5)சிம்மம்

மாசி மாதத்தில் எந்த ஒரு முடிவு எடுப்பதை தவிர்க்கவும். எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது.

6)கன்னி

உங்கள் ராசிப்படி இந்த மாதம் தங்களுக்கு மதிப்பு மரியாதையை கூட்டும் மாதமாக இருக்கின்றது. எதிலும் எதிர்த்து போராடும் ஆற்றல் இந்த மாதத்தில் உங்களுக்கு கிடைக்கும்.

7)துலாம்

திருமண யோகம் உண்டாகும் மாதமாக மாசி உள்ளது. திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க கூடிய மாதம்.

8)விருச்சிகம்

துன்பங்கள் விலகி இன்பம் பெருகும் மாதமாக மாசி மாதம் இருக்கின்றது. இம்மாதத்தில் நீங்கள் தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம்.

9)தனுசு

அரசாங்க வேலை கிடைக்கும்… மற்றவர்கள் பாராட்டை பெறுவீர்கள்… உடல் ஆரோக்கியம் மேம்படும்.

10)மகரம்

இந்த மாதம் தங்களுக்கு சம்பள உயர்வு ஏற்படும் மாதமாக இருக்கின்றது. தங்களது கனவை நனவாக்க போராடும் மாதமாக உள்ளது.

11)கும்பம்

உங்கள் ராசிப்படி மாசி தங்களுக்கு வெற்றி கொடுக்கும் ஒன்றாக உள்ளது.. எந்த ஒரு விஷயத்திலும் தெளிவு கிடைக்கும்… சுபச் செலவு ஏற்படும். பணம் சேமிக்க வழி பிறக்கும்.

12)மீனம்

உங்கள் ராசிக்கு இம்மாதம் நல்லது நாடக்கும்… எந்த ஒரு செயலையும் ஆழ்ந்து யோசித்த பின்னர் செய்வது நல்லது.